மிகவும் குறைவான விலையில் களமிறங்கியது ஜப்பான் நிறுவனத்தின் கார்! மாருதிக்கு இனி கஷ்ட காலம்தான்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார், இன்று (ஜூலை 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு நிஸான் டெக்டான் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), டாடா சியரா (Tata Sierra), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), எம்ஜி ஹெக்டர் (MG Hector) ஆகிய கார்களுக்கு போட்டியாக நிஸான் டெக்டான் களமிறக்கப்பட்டுள்ளது.

Nissan Tekton SUV

நிஸான் டெக்டான் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இவை இரண்டுமே ரெனால்ட் டஸ்டர் காரிலும் வழங்கப்படுகின்றன. ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில்தான் நிஸான் டெக்டான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய 2 நிறுவனங்களும் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றன. இந்த கூட்டணியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. நிஸான் டெக்டான் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 99 பிஹெச்பி பவர் மற்றும் 166 என்எம் டார்க் ஆக உள்ளது. இதன் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் (Gear Box Option) மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

Nissan Tekton Side View

மறுபக்கம் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 160 பிஹெச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் ஆக உள்ளது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிஸான் டெக்டான் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 19.50 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என்று நிஸான் தெரிவித்துள்ளது.

மறுபக்கம் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 17.80 கிலோ மீட்டர் மைலேஜையும், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல்/6 ஸ்பீடு டிசிடி மாடல் ஒரு லிட்டருக்கு 18.50 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் டஸ்டர் காரில் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் அறிமுகமாகவுள்ளது.

Nissan Tekton

ஆனால் இந்த இன்ஜின் நிஸான் டெக்டான் காரில் வழங்கப்படாது என தெரிகிறது. ரெனால்ட் டஸ்டர் காரின் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் நிஸான் டெக்டான் காரில் வழங்கப்படாது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு ஏற்ப இன்று நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் குறித்து நிஸான் நிறுவனம் எதுவும் அறிவிக்கவில்லை.

எனவே இந்த இன்ஜின் ஆப்ஷன் நிஸான் டெக்டான் காரில் வழங்கப்படாது என்றே தெரிகிறது. சரி, வசதிகளுக்கு (Features) வருவோம். நிஸான் டெக்டான் காரில், பனரோமிக் சன்ரூஃப், 10.10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ரியர் ஏசி வெண்ட்கள் உடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் லெதரேட் அப்ஹோல்ட்ஸ்ரி போன்ற வசதிகளையும் நிஸான் டெக்டான் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பிலும் நிஸான் டெக்டான் தலைசிறந்து விளங்குகிறது.

பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Tests) நிஸான் டெக்டான் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.49 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளையும் நிஸான் டெக்டான் ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது.

லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் நிஸான் டெக்டான் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் நிஸான் டெக்டான் கார் க்ரே, ப்ளூ, ரெட், சில்வர், பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும்.

அத்துடன் க்ரே/பிளாக், ரெட்/பிளாக், ப்ளூ/பிளாக், சில்வர்/பிளாக் மற்றும் ஒயிட்/பிளாக் ஆகிய ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களும் நிஸான் டெக்டான் காரில் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நிஸான் டெக்டான் காரின் நீளம் (Length) 4.3 மீட்டர்கள் ஆகவும், வீல்பேஸ் நீளம் (Wheelbase Length) 2.6 மீட்டர்களாகவும் உள்ளது.

2வது வரிசை இருக்கைகள் பயன்பாட்டில் இருக்கும்போது நிஸான் டெக்டான் காரின் பூட் ஸ்பேஸ் (Boot Space) 518 லிட்டர்களாக இருக்கிறது. அதே நேரத்தில் 2வது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால், பூட் ஸ்பேஸ் இடவசதியை 1,789 லிட்டர்களாக உயர்த்தி கொள்ள முடியும். எனவே லக்கேஜ்களை வைப்பதற்கு சிரமப்பட வேண்டியதில்லை.

நிஸான் டெக்டான் காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள நிஸான் பேட்ரல் (Nissan Patrol) காரை மனதில் வைத்து நிஸான் டெக்டான் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது நிஸான் டெக்டான் காரை கவர்ச்சிகரமானதாக காட்டுகிறது.

நிஸான் டெக்டான் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி நிஸான் டெக்டான் காரை நீங்கள் 'புக்கிங்' செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் டெலிவரி (Delivery) பணிகள் வரும் 20ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

நிஸான் டெக்டான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிஸான் டெக்டான் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 18.59 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் டெக்டான் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) கார்தான் ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தை இந்திய சந்தையில் தனி ஆளாக தாங்கி பிடித்து கொண்டுள்ளது. நிஸான் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த க்ராவைட் (Nissan Gravite) காருக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே நிஸான் நிறுவனம் டெக்டான் காரை பெரிதாக நம்பியுள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகாது என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக நிஸான் டெக்டான் கருதப்படுகிறது. இதன் வருகை, இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியை மேலும் கடுமையாக்கலாம் எனவும் நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Thursday, July 9, 2026, 14:10 [IST]
English summary
Nissan tekton suv launched in india price mileage safety features design bncap rating
மேலும்... #nissan #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X