ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க போறீங்களா? நிசானின் இந்த புதிய காரை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க!

நிசான் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக டெக்டன் என்கிற புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலாவதாக நிசான் டெக்டன் வருகிற ஜூலை 9ஆம் தேதி உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. அந்த தினத்தில், விலையை தவிர்த்து காரை பற்றிய மற்ற விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து இந்தியாவிற்கான டெக்டன் அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செய்யப்படும்.

இந்த நிலையில் தற்போது, டெக்டனின் அறிமுகத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்கும் விதமாக புதிய டீசர் ஒன்றை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய டீசரில், டெக்டன் காரின் முன்பக்கம் கிட்டத்தட்ட முழுமையாக காட்டப்பட்டுள்ளது. காரின் பெயரான 'Tekton' பொனெட் மீது பொறிக்கப்பட்டுள்ளதை இந்த டீசரில் பார்க்கலாம்.

nissan tekton suv teased

நன்கு அகலமாக வழங்கப்பட்டுள்ள முன்பக்க க்ரில்லில் எலிமெண்ட்கள் கிடைமட்டமாக வழங்கப்பட்டுள்ளன. க்ரில்லுக்கு மத்தியில் நிசான் நிறுவனத்தின் வட்ட வடிவிலான லோகோ பொருத்தப்பட்டுள்ளது. மேலும், க்ரில்லின் மீது சிவப்பு நிறத்திலான ஸ்ட்ரிப் ஒன்று சொல்வதையும் பார்க்கலாம். இதன் மூலமாக டெக்டனின் முன்பகுதி ஒரு ரக்டான லுக்கை கொண்டுள்ளது. விற்பனையில் உள்ள நிசான் மேக்னைட் காரை காட்டிலும் ரக்டான முன்பக்கத்தை டெக்டன் பெற்றுள்ளது.

க்ரில்லுக்கு இரு பக்கங்களிலும் செவ்வக வடிவிலான LED ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றிலும், ஒளிரும் DRL-களை டீசரில் பார்க்கலாம். முன்பக்க பம்பரில் சதுர வடிவில் குழிகள் வழங்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் பார்க்க முடியவில்லை என்றாலும், முந்தைய டீசரில் டெக்டன் காரின் பொனெட்டில் மேலே எழுப்பப்பட்ட ஸ்கூப்-ஸ்டைல் பகுதியை பார்க்க முடிந்தது.

nissan tekton suv teased

மேலும், மேற்கூரையில் கம்பிகள், நன்கு பெரியதான அவுட்-சைடு மிரர்கள் மற்றும் பெரிய விண்ட் ஸ்கிரீனையும் அந்த டீசரில் பார்க்க முடிந்தது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டரின் அதே ஆர்ச்சிடெக்சரில் தான் புதிய டெக்டன் உருவாக்கப்படுகிறது. நிசான் டெக்டனில் எந்த மாதிரியான என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன என்பது இதுவரையில் இன்னும் தெரியவரவில்லை.

எங்களுக்கு தெரிந்தவரையில், ரெனால்ட் டஸ்டர் காரின் 1 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் டெக்டனில் வழங்கப்படலாம். அதாவது, நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் எதுவும் இல்லாமல், இரண்டுமே டர்போ என்ஜின் ஆக வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில், 1.3 லிட்டர் டர்போ என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக சுமார் 160 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

டெக்டன் ஹைப்ரீட் காரையும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யும் திட்டத்தை நிச்சயமாக நிசான் நிறுவனம் வைத்திருக்கும். தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், டாஷ்போர்டில் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

பாதுகாப்பிற்கு, 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ADAS வழங்கப்படலாம். ரூ.10 லட்சம்- ரூ.20 லட்சம் வரையிலான விலைகளில் எதிர்பார்க்கப்படும் புதிய நிசான் டெக்டன் காருக்கு விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் உள்ளிட்டவை முக்கிய போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா, செல்டோஸ் உள்ளிட்ட தென்கொரிய கார்கள் இந்திய மிட்-சைஸ் SUV கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இதில் ஒரு இடத்தை பிடிக்க ஜப்பானிய நிசான் நிறுவனம் கடந்த பல வருடங்களாகவே முயற்சித்து வருகிறது. அதன்படி, இந்த நிறுவனத்தின் அடுத்த புதிய முயற்சியே டெக்டன் ஆகும்.

Article Published On: Tuesday, June 23, 2026, 15:12 [IST]
English summary
Nissan tekton suv teased again ahead of july 9 global unveil
மேலும்... #nissan #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out