அடிமாட்டு விலையில் களமிறங்கும் ஜப்பான் நிறுவனத்தின் கார்! மாருதி இப்பவே வெடவெடத்து போயிருக்கும்!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. இருப்பினும் கூடிய விரைவில் ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், குடியரசு தினத்தன்று (Republic Day), அதாவது வரும் ஜனவரி 26ம் தேதி (January 26) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்களில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

Nissan Tekton

முன்னதாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில், நிஸான் நிறுவனமும் ஒரு காரை உருவாக்கியுள்ளது. அதற்கு நிஸான் டெக்டான் (Nissan Tekton) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கார் வரும் பிப்ரவரி 4ம் தேதி (February 4) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்களில், நிஸான் டெக்டான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இது குறித்து கார்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும், நீண்ட காலமாகவே கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2025 Renault Duster

நிஸான் டெக்டான் காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options), வசதிகள் (Features) போன்ற தகவல்கள் எதுவும் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், அந்த காரில் வழங்கப்படும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகள் அனைத்தும், அப்படியே நிஸான் டெக்டான் காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் டெக்டான் ஆகிய 2 கார்களையும் வேறுபடுத்தி காட்டும் வகையில், டிசைன் (Design) உள்ளிட்ட அம்சங்களில் ஏராளமான மாற்றங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் டெக்டான் ஆகிய இரண்டும், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும்.

இது ஏற்கனவே மிகவும் கடுமையான போட்டி நிலவி கொண்டுள்ள ஒரு செக்மெண்ட்-ஆக உள்ளது. இந்த சூழலில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் டெக்டான் ஆகிய 2 புதிய கார்களின் வருகையால், இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், போட்டி இன்னும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த 2 கார்களின் வருகை, மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹோண்டா எலவேட் (Honda Elevate), எம்ஜி அஸ்டர் (MG Astor), டாடா கர்வ் (Tata Curvv) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

அத்துடன் டாடா சியரா (Tata Sierra), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் டெக்டான் ஆகிய 2 கார்களும், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் டெக்டான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 அல்லது 10.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நிஸான் டெக்டான் கார் இந்த விலையில் வந்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2026, 13:38 [IST]
English summary
Nissan tekton suv unveil date february 4 check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+