அடுத்த மாதம் அறிமுகமாகிறது நிஸான் டெக்டான்... மொத்த இந்தியாவும் காத்து கிடக்கற கார்...
ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக தாக்கு பிடித்ததற்கு காரணமே மேக்னைட்தான் (Nissan Magnite). ஒருவேளை இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி மட்டும் இல்லாமல் போயிருந்தால், நிஸான் எப்போதோ இந்திய சந்தையை விட்டு வெளியேறியிருக்கும்.
ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படியான சம்பவங்கள் எதுவும் நடப்பதற்கு முன்னதாகவே நிஸான் க்ராவைட் (Nissan Gravite), இந்தியாவிற்கு வந்து விட்டது. இந்த சப்-4 மீட்டர் 7 சீட்டர் எம்பிவி காரின் வருகைக்கு பிறகு இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்திற்கு புது தெம்பு கிடைத்துள்ளது.

ஏனெனில் இதன் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாய் மட்டுமே. ஒரு 7 சீட்டர் கார் இவ்வளவு குறைவான விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விடுவார்களா என்ன? எனவே இந்திய சந்தையில் நிஸான் க்ராவைட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து மற்றொரு அதிரி புதிரி ஹிட் அடிக்க கூடிய காரை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அது நிஸான் டெக்டான் (Nissan Tekton) ஆகும். இந்திய சந்தையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ரெனால்ட் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் அடிப்படையில் நிஸான் நிறுவனமும் ஒரு புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அதுதான் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நிஸான் டெக்டான். இந்த காரின் அறிமுகம் குறித்து, நிஸான் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சவுரப் வத்ஸா தற்போது பேசியுள்ளார். கார்டாக் தளத்தில் வெளியாகியுள்ள இந்த செய்தியின்படி பார்த்தால், வரும் ஜூன் மாதம் (அடுத்த மாதம்) நிஸான் டெக்டான் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதமே நிஸான் டெக்டான் கார் இந்திய சந்தையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த சூழலில்தான் வரும் ஜூன் மாதம் நிஸான் டெக்டான் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு அடுத்த ஒரு சில மாதங்களில் நிஸான் டெக்டான் காரின் விலை அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மற்றும் வசதிகள் (Features) அப்படியே நிஸான் டெக்டான் காரிலும் கொடுக்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பார்த்தால் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை நிஸான் டெக்டான் கொண்டிருக்கலாம். அத்துடன் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு போன்ற அதிநவீன வசதிகளையும் நிஸான் டெக்டான் காரில் நம்மால் எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் டெக்டான் காரின் வருகை இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், டாடா சியரா, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கடைசி 3 பத்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications