மாருதி, டாடாவிற்கு எமனாக மாற போகும் ஜப்பான் கார்! நாள் நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று நிஸான் டெக்டான் (Nissan Tekton). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த நிஸான் டெக்டான் கார் இன்று (பிப்ரவரி 4) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு சில காரணங்களால் நிஸான் டெக்டான் காரின் அறிமுகம் தள்ளி போயுள்ளது. நிஸான் டெக்டான் காரின் அறிமுகம் தள்ளி போனது ஏன்? என்பதற்கான காரணம் என்னவென்று உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் நிஸான் டெக்டான் காரின் புதிய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நிஸான் க்ராவைட் (Nissan Gravite) காரின் அறிமுகமும் இதேபோல் தள்ளி போனது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். நிஸான் க்ராவைட் காரானது, 7 சீட்டர் எம்பிவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த கார் கடந்த ஜனவரி 21ம் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
இருப்பினும் நிஸான் க்ராவைட் கார் வரும் பிப்ரவரி 17ம் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிஸான் க்ராவைட் கார் வரும் பிப்ரவரி 17ம் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என இன்றுதான் அறிவிக்கப்பட்டது. இதே போல் நிஸான் டெக்டான் காரின் புதிய அறிமுக தேதியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என நாம் உறுதியாக நம்பலாம்.

நிஸான் டெக்டான் காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளை (Features) எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, நிஸான் டெக்டான் காரின் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக இருக்கலாம். செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆப்ஷன்களை (Engine Options) நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் டெக்டான் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 10 அல்லது 11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் டாடா சியரா (Tata Sierra) போன்ற கார்களுக்கு எல்லாம், நிஸான் டெக்டான் விற்பனையில் சவால் அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நிஸான் டெக்டான் காரானது, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New Renault Duster) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனமும், பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் நீண்ட காலமாகவே கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








