நிசானின் புதிய காரில், யார் என்ன சொன்னாலும் இந்த வேரியண்ட்டை வாங்க பாருங்க!

நிசான் நிறுவனம் இந்தியாவில் முன்பு விற்பனை செய்த கிக்ஸ் காரின் விற்பனையை நிறுத்தியதற்கு பிறகு அதன் முதல் மிட்-சைஸ் SUV காராக டெக்டானை அறிமுகப்படுத்தி உள்ளது. ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டெக்டான் மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எந்த வேரியண்ட்டில் டெக்டான் காரை வாங்கலாம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டெக்டானின் வேரியண்ட்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர், இந்த காரின் என்ஜின் ஆப்ஷன்களை பற்றி பார்த்துவிடுவோம். இந்த புதிய நிசான் கார் ஆனது 1 லிட்டர் T160 பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் T280 பெட்ரோல் என்ஜின் என இரு விதமான டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கும். இதில் T160 என்ஜின் ஆனது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டும் கிடைக்கும் நிலையில், T280 என்ஜின் உடன் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கிறது.

nissan tekton car variants-wise features list

விசியா (Visia)
நிசான் டெக்டான் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான இது, T160 பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், இதில் மேட்ரிக்ஸ் விஷன் LED ஹெட்லைட்கள், சிக்னெச்சர் LED DRL-கள் மற்றும் LED ஹெட்லைட்கள், எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சக்கரம் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

விசியா பிளஸ் (Visia Plus)
விசியாவுக்கு அடுத்த நிலையில் உள்ள வேரியண்ட்டான இதில் விசியாவில் கிடைக்கும் அனைத்து அம்சங்களுடன் கூடுதலாக 9-இன்ச் ஃப்ளோட்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, ஸ்டீயரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள் மற்றும் ரியர்-வியூ கேமரா உள்ளிட்டவற்றை பெறலாம். இருப்பினும், இதிலும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தான் கிடைக்கும்.

nissan tekton car variants-wise features list

அசெண்டா (Acenta)
T280 என்ஜின் உடன் டெக்டான் காரை வாங்குவதற்கு குறைந்தது இந்த வேரியண்ட்டை நீங்கள் வாங்க வேண்டும். மேலும், இந்த வேரியண்ட்டில் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் பெறலாம். இந்த வேரியண்ட்டில் இரட்டை நிறத்திலான வீல்-கவர்கள் உடன் 17 இன்ச்சில் இரும்பு சக்கரங்கள், எதிர்காற்றில் எளிதாக இயங்குவதற்கு ஏற்ப ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்டவற்றை பெறலாம்.

என்-கனெக்ட்டா (N-Connecta)
நிசான் டெக்டானை வாங்குவதற்கு இந்த வேரியண்ட் ஏற்றதாக இருக்கும் என்பது எங்களது பரிந்துரைப்பாகும். ஏனெனில், இது T160 மற்றும் T280 என்ஜின் ஆப்ஷன்களில் கிடைப்பது மட்டுமின்றி, எலெக்ட்ரிக் பனோராமிக் சன்ரூஃப், 18-இன்ச் அலாய் சக்கரங்கள், C-வடிவ மேட்ரிக்ஸ் விஷன் LED ஹெட்லைட்கள், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற இன்றைய கால மாடர்ன் அம்சங்கள் உடன் கிடைக்கிறது.

டெக்னா (Tekna)
இதற்கு அடுத்து டெக்னா பிளஸ் என்கிற வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்க முடியாதவர்களுக்கு டெக்னா வேரியண்ட்டே போதுமானது. T160 மற்றும் T280 என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் 15 பாதுகாப்பு வசதிகள் உடன் ADAS, பின்பக்க டிஸ்க் பிரேக்குகள், ஏறுமுகமான சாலையில் இருந்து இறங்கும்போது தேவைப்படும் கண்ட்ரோல், 18-இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை கிடைக்கும்.

டெக்னா பிளஸ் (Tekna Plus)
என்-கனெக்ட்டா வேரியண்ட்டிற்கு அடுத்து டெக்டான் காரில் வாங்குவதற்கு ஏற்ற வேரியண்ட்டாக இதனை நாங்கள் கூறுகிறோம். விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டாக இருப்பினும், இதில் நிசான் நிறுவனம் தனது முழு திறமையையும், அனுபவத்தையும் காட்டியுள்ளது. இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் எலெக்ட்ரிக் டெயில்கேட், 6 வழிகளில் எலெக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகளை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், புதிய நிசான் டெக்டான் காரின் வேரியண்ட்களில் எங்களது சாய்ஸ் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்டான என்-கனெக்ட்டா ஆகும். கூடுதாக செலவழிக்க தயார் என்றால், டெக்னா பிளஸ் வேரியண்ட்டை வாங்கலாம். டெக்டான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.49 லட்சத்தில் இருந்து ரூ.16.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Article Published On: Tuesday, July 14, 2026, 6:08 [IST]
English summary
Nissan tekton visia visia plus acenta n connecta tekna and tekna plus variants wise features list
மேலும்... #nissan #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out