நிஸான் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

இந்திய சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகின்றன. இதில், டாடா (Tata), ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), மஹிந்திரா (Mahindra), கியா (Kia), மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஆனால் ரெனால்ட் (Renault) மற்றும் அதனுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வரும் நிஸான் (Nissan) ஆகிய 2 நிறுவனங்களும் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. இருப்பினும் இந்திய சந்தையில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அவை இரண்டும் தீவிரமாக தயாராகி கொண்டிருக்கின்றன.

Renault Bridger

இதில், ரெனால்ட் நிறுவனம்தான் இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger) ஆகும். எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த ரெனால்ட் பிரிட்ஜர் கார் பெட்ரோல், ஹைப்ரிட், சிஎன்ஜி என பல்வேறு பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினும் ஒன்றாகும். எனவே இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பிரிட்ஜர் பெறவுள்ளது. ரெனால்ட் பிரிட்ஜர் இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் தற்போதைய நிலையில் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இதில் 35 kWh மற்றும் 55 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Renault Bridger SUV

இதில், 35 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 300 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் 55 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் டிரைவிங் ரேஞ்ச் ஆகும். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

அத்துடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிளையும் ரெனால்ட் பிரிட்ஜர் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக இதன் நிஸான் வெர்ஷன்தான் இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய 2 நிறுவனங்களும் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றன. இதன் அடிப்படையில்தான் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் நிஸான் வெர்ஷன் விற்பனைக்கு வரலாம் என்று நாங்கள் கூறுகிறோம்.

ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நிஸான் க்ராவைட் காரை இதற்கு உதாரணமாக கூறலாம். அதேபோல் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நிஸான் டெக்டான் காரையும் இதற்கு உதாரணமாக கூற முடியும். எனவே ரெனால்ட் பிரிட்ஜர் காரின் நிஸான் வெர்ஷனும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனம் பிரிட்ஜர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வரும் 2028ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் நிஸான் வெர்ஷன், ரெனால்ட் பிரிட்ஜர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த 6 மாதங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் பிரிட்ஜர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10-11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதை விட ஒரு சில ஆயிரங்கள் குறைவான விலையில் நிஸான் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Article Published On: Wednesday, July 1, 2026, 18:14 [IST]
English summary
Nissans first electric car in india renault bridger battery range expected price
மேலும்... #nissan #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out