அக்.1 முதல் கார் விலை உயர்வு... எந்த கார்கள் விலை அதிகரிக்கிறது?

இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சற்றே அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அக்டோபர் 1, 2026 முதல் வாகனங்களின் விலையை உயர்த்த வாகன நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில், சில நிறுவனங்கள் முந்திக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளன.சில நிறுவனங்கள் இதற்கு பின்பாட்டு பாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கார்களுக்கான உதிரிபாகங்களின் தயாரிப்பு செலவீனம், செயல்பாட்டு செலவீனங்கள் அதிகரித்துள்ளதை காரணம் காட்டி இந்த விலை உயர்வை பிரபல கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. அதன்படி, நாளை (அக்டோபர் 1) முதல் எந்தெந்த நிறுவனங்களின் கார்களின் விலை உயர்கிறது, எந்தெந்த மாடல்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதைக் இந்த செய்தியில் பார்க்கலாம்.

Car Price Hike Collage Image

ஸ்கோடா ஆட்டோ இந்தியா

சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட கார்களுக்கு பெயர் பெற்ற ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் விலை உயர்வு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் தனது அனைத்து கார் மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலையையும் 1.2 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமையை தராத வகையில் மிக குறைவான விலை உயர்வு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக ரூ.20,000 வரை கார்களின் விலை உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு ஸ்கோடா நிறுவனத்தின் கைலாக், குஷாக், ஸ்லாவியா மற்றும் கோடியாக் உள்ளிட்ட அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும். தேர்வு செய்யும் வேரியண்ட் மற்றும் எஞ்சின் தேர்வை பொறுத்து இந்த விலை மாறுபடும். பண்டிகைக் காலத்தில் புது கார் வாங்கத் திட்டமிடுவோருக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தக்கூடும்.

Also Read

கியா இந்தியா

கியா நிறுவனமும் அக்டோபர் மாதத்திலிருந்து தனது குறிப்பிட்ட வாகனங்களின் விலையை உயர்த்த ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கியா சைரோஸ் காரின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, கியா சைரோஸ் காருக்கு அதிக வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்துள்ள நிலையில், இந்த விலை உயர்வால் புக்கிங் ரத்து செய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், இன்று செப்டம்பர் 30 வரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பழைய விலையை வழங்குவதற்கு வாய்ப்பு தருமாறு கியா டீலர்கள் அந்நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல் இல்லை. எனவே, நீங்கள் கியா சைரோஸ் கார் புக்கிங் செய்திருந்தால், டீலரை ஒருமுறை தொடர்பு கொண்டு விலை உயர்வால் பாதிப்பு இருக்குமா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்வது அவசியம்.

Also Read

டாடா கார்ஸ்

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது குறிப்பிட்ட பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார (EV) கார் மாடல்களின் விலையை அக்டோபர் 1 முதல் அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாடல்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.25,000 வரை விலை உயர்வு இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. நெக்ஸான், பன்ச் மற்றும் சமீபத்தில் அறிமுகமான மாடல்கள் இந்த விலை உயர்வு பட்டியலில் வர வாய்ப்புள்ளது.

மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிலை என்ன?

பொதுவாக பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தில் முன்னணி நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விலை உயர்வை அறிவிப்பது வழக்கம். மாருதி சுஸுகி, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 1-க்கான புதிய விலைப்பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், தயாரிப்புச் செலவு உயர்வைக் கருத்தில் கொண்டு வரும் நாட்களில் தங்கள் மாடல்களின் விலையை உயர்த்த வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

காரின் எக்ஸ்ஷோரூம் விலை உயரும் போது, அதற்கேற்ப சாலை வரி (Road Tax) மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்களும் சிறிதளவு அதிகரிக்கும். இதனால் ஆன்ரோடு விலையில் சில ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படும். எனவே, இந்த பண்டிகைக் காலத்தில் புதிய கார் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், அக்டோபர் 1 விலை உயர்வு முழுமையாக அமலுக்கு வரும் முன்பே அல்லது நடப்பு செப்டம்பர் மாதச் சலுகைகள் மற்றும் முன்பதிவு பாதுகாப்பு சலுகைகளைப் பயன்படுத்தி வாகன முன்பதிவு செய்வது சிறந்ததாக இருக்கும்.

Article Published On: Thursday, October 1, 2026, 7:10 [IST]
English summary
October 1 car price hike india sokda kia tata cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out