ரூ.10 லட்சத்திற்குள் பாதுகாப்பான டாடா எலெக்ட்ரிக் கார்! மே 28 வரை வெயிட் பண்ணுங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் விலை குறைவான எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி-ஐ வருகிற மே 28ஆம் தேதி புதிய ஃபேஸ்லிஃப்டிற்கு அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. பெட்ரோல் என்ஜின் உடனான டியாகோ காருடன் சேர்த்து டியாகோ இவி எலெக்ட்ரிக் காரும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் டியாகோ இவி காருக்கும், புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காருக்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெளிப்புற தோற்றம்: டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் கொண்டுவரப்படும் முக்கியமான மாற்றங்களுள் ஒன்று, க்ரில் ஆகும். தற்சமயம் கருப்பு நிறத்தில் வழங்கப்படும் முன்பக்க க்ரில் ஆனது புதிய மாடலில் காரின் உடல் நிறத்தில் வழங்கப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால், புதிய டியாகோ இவி காரில் க்ரில் ஒன்று இருப்பதே தெரியவில்லை.

old tata tiago ev vs new tiago ev facelift

எல்இடி டிஆர்எல்-கள் உடன் புதிய எல்இடி ஹெட்லைட்கள், புதிய டிசைனில் முன்பக்க பம்பர் உள்ளிட்டவற்றையும் புதிய டியாகோ இவி கார் பெற்றுள்ளது. பம்பரில் ஏர் இண்டேக்கிற்கான துளைகள் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி, இந்த எலெக்ட்ரிக் காரின் பக்கவாட்டு பகுதி ஆனது புதிய மாடலிலும் எப்போதும் உள்ளதை போலவே உள்ளது.

14-இன்ச் இரும்பு சக்கரங்களுக்கான வீல் கவர் டிசைன் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. காரின் பின்பக்கம் ஆனது முன்பக்கத்தை போலவே பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிசைனிலான எல்இடி டெயில்லைட்கள் இரண்டையும் சிவப்பு நிறத்திலான லைட் பார் இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. டபுள்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள புதிய பின்பக்க பம்பரில், கார் ரிவர்ஸில் வருவதை எச்சரிக்கும் விளக்கு ஆனது மத்தியில் வழங்கப்பட்டுள்ளது.

old tata tiago ev vs new tiago ev facelift

உட்புற தோற்றம்: புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறத்தை இன்னும் டாடா நிறுவனம் வெளியிடவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், காரின் வெளிபுறத்தை போலவே உட்புற கேபினும் புதிய லே-அவுட்டில் வழங்கப்படும். டிரைவருக்கு விபரங்களை வழங்கும் திரையும், இருக்கைகளுக்கான அப்ஹோல்ஸ்டரியும் புதிய டிசைனில் வழங்கப்படலாம்.

மற்றப்படி, டியாகோ இவி காரின் தற்போதைய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரையில் மாற்றம் இருக்காது என்றாலும், புதிய டியாகோ இவி காரில் 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சமாக வழங்கப்படலாம். சோதனைகளின் போது அடையாளம் காணப்பட்ட புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் கார்களில் முன்பக்க பம்பர் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளில் கேமராக்களை பார்க்க முடிந்ததால் 360-டிகிரி கேமராவும் புதியதாக வழங்கப்படலாம்.

எலெக்ட்ரிக் மோட்டார் & விலை: தற்சமயம் டியாகோ இவி கார் இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் 19.2kWh மற்றும் 24kWh என இரு விதமான பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. பேட்டரியை பொறுத்து எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கும் இயக்க ஆற்றல் மற்றும் ரேஞ்சும் வேறுப்படுகிறது.

புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரில் பெரிய அளவிலான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். ஏனெனில், பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரில் பெரிய பேட்டரிகளை டாடா அறிமுகப்படுத்தியது. பெரிய பேட்டரிகளுக்கு ஏற்ப டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம். தற்சமயம் டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.11.14 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, டியாகோ இவி காரை தற்போது உள்ளதை விட தோற்றத்தில் மாடர்ன் தரத்திற்கு கொண்டுவர டாடா மோட்டார்ஸ் விரும்புவது தெளிவாக தெரிகிறது. அதேபோன்று, பெரிய அளவிலான பேட்டரி மூலமாக பவர்ஃபுல்லான காராக டியாகோ இவி மாற்றப்படுகிறது. அதேநேரம், இதற்கெல்லாம் ஏற்றவாறு புதிய டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் கார் சற்று விலைமிக்கதாக அறிமுகம் செய்யப்படும்.

Article Published On: Friday, May 22, 2026, 21:51 [IST]
English summary
Old tata tiago ev vs new tiago ev facelift check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+