வெறும் 3 கார்தான் வித்திருக்கு... அதிர்ச்சியில் உறைந்த மாருதி சுஸுகி... மத்திய அரசுக்கும் இது ஷாக்கிங்தான்!

கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் எத்தனால் (Ethanol) பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எத்தனாலை இந்தியாவிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். கரும்பு, சோளம் போன்றவற்றில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையை எத்தனால் குறைப்பதுடன், இந்தியாவை சேர்ந்த விவசாயிகளுக்கும் இது பொருளாதார ரீதியில் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். இதன் காரணமாகவே எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Maruti Suzuki Wagon R Bioflex

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இது E20 எரிபொருள் என அழைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தற்போது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் (Flex Fuel Vehicles) அதிக அளவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

அதிகப்படியான எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், அவற்றின் இன்ஜின் உள்ளிட்ட இயந்திரங்களில் ஏராளமான மாற்றங்கள் தேவை. அப்படி மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள்தான் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள் என அழைக்கப்படுகின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) போன்ற நிறுவனங்கள் எல்லாம் தற்போது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டன.

Maruti Suzuki Wagon R

மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரை அதன் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனத்தை கடந்த ஜூன் 4ம் தேதி அறிமுகம் செய்தது. அது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் (Bioflex) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் காரின் விலையை கடந்த ஜூன் 15ம் தேதி அறிவித்தது. இந்த சூழலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. வாகன் (Vahan) தரவுகளின்படி பார்த்தால், கடந்த ஜூன் 29ம் தேதி நிலவரப்படி, வெறும் 3 மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் கார்கள் மட்டும்தான் விற்பனையாகியுள்ளன.

இது குறித்து மணிகண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் காரின் விலை (Price) 7.24 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 1.2 லிட்டர் 4 சிலிண்டர் K12N இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது E20 முதல் E100 வரையிலான எரிபொருளில் இயங்க கூடிய திறன் வாய்ந்தது. அதாவது 100 சதவீதம் முழுமையான எத்தனாலில் கூட இது இயங்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் மிகவும் மந்தமான தொடக்கத்தை சந்தித்துள்ளது. இந்தியாவில் தற்போது E85 எரிபொருளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே E85 எரிபொருள் கிடைக்கிறது. மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் காரின் மந்தமான தொடக்கத்திற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

அத்துடன் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை இயக்குவதற்கு எவ்வளவு செலவு (Running Cost) ஆகும்? என்பதில் பொதுமக்களுக்கு சந்தேகங்கள் உள்ளன. மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் காரின் மந்தமான தொடக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

Article Published On: Friday, July 3, 2026, 13:31 [IST]
English summary
Only 3 units of maruti suzuki wagon r bioflex sold in june
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out