மலை போல் நம்பிய கார் கவுத்து விட்றுச்சு! இந்தியாவிலேயே விலை குறைவான 7 சீட்டர் ஏன் போணியாகல தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார்தான் தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார் (Most Affordable 7 Seater MPV Car In India) ஆகும்.

அதாவது இது ரெனால்ட் ட்ரைபரை (Renault Triber) விட மிகவும் விலை குறைவான கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.81 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.73 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Nissan Gravite

இருப்பினும் நிஸான் க்ராவைட் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டே (Sales Report) இதற்கு சாட்சி. வி3 கார்ஸ் தளத்தின் தரவுகளின்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 2,375 நிஸான் க்ராவைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த மாதத்தில்தான் நிஸான் க்ராவைட் காரின் டெலிவரி (Delivery) தொடங்கியது. முதல் மாதம் என்பதால், ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை நிஸான் க்ராவைட் பதிவு செய்தது. அதன்பின் வந்த மாதங்களில் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக நாளுக்கு நாள் விற்பனை குறைந்து வருகிறது.

Nissan Gravite Seats

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 1,428 நிஸான் க்ராவைட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து வந்த மே மாதம் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, வெறும் 1,283 ஆக குறைந்துள்ளது. அதாவது முதல் 3 மாதங்களில் வெறும் 5,086 நிஸான் க்ராவைட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிஸான் க்ராவைட் காருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதை இந்த எண்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

நிஸான் நிறுவனத்தை இந்திய சந்தையில் உயிர்ப்புடன் வைத்திருந்தது மேக்னைட் (Nissan Magnite) கார் மட்டுமே. நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-trail) கார் ஒரு மாதத்தில் ஒரு சில கார்கள் விற்பனையாகி விட்டாலே ஆச்சரியம்தான். எனவே நிஸான் நிறுவனம் க்ராவைட் காரை மலை போல் நம்பியிருந்தது.

ஆனால் க்ராவைட் கார் நிஸான் நிறுவனத்தை கிட்டத்தட்ட கை விட்டு விட்டது போலதான் தெரிகிறது. நிஸான் க்ராவைட் 7 சீட்டர் கார். ஆனால் 7 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே நிஸான் வழங்கியுள்ளது. இதன் பவர் அவுட்புட் வெறும் 72 ஹெச்பி மற்றும் 96 என்எம் மட்டுமே.

நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு வேண்டுமானால் இது ஏற்றதாக இருக்கலாம். ஆனால் நெடுஞ்சாலைகளில்? வேகமாக செல்லும்போது ஓவர்டேக் எடுக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அத்துடன் ஒன்று அல்லது இரண்டு கியர்களை குறைக்க வேண்டும். இதுவே நிஸான் க்ராவைட் காரின் மிகப்பெரிய குறை. இதன் காரணமாகவே நிஸான் க்ராவைட் காரை வாங்க பலரும் தயங்குகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் நிறுவனம் க்ராவைட் காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்கினால், அதன் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 7 பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காருக்கு சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன் மிகவும் முக்கியம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Tuesday, June 23, 2026, 22:24 [IST]
English summary
Only 5086 nissan gravite cars sold in first 3 months
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out