அதிக மைலேஜ் தரும் கார்களின் விலை பெரிய அளவில் குறையுது! பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க அரசு அதிரடி திட்டம்

இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்து (Petrol, Diesel Price Hike) கொண்டே வருகிறது. தமிழக தலைநகர் சென்னையில் கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 100.80 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று (மே 25) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 107.77 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 10 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6.97 ரூபாய் உயர்ந்துள்ளது. மறுபக்கம் சென்னையில் கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் டீசலின் விலை வெறும் 92.39 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 99.55 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 10 நாட்களில் ஒரு லிட்டர் டீசலின் விலை 7.16 ரூபாய் உயர்ந்துள்ளது.

Maruti Suzuki Grand Vitara Side Design

இங்கே மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த விலை உயர்வு இத்துடன் நிற்க போவதில்லை. வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மேலும் உயரும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் (Electric) மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களுக்கு (Strong Hybrid Vehicles) மாற பலரும் முடிவு செய்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு அதிக செலவு ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களையும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களையும் இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆகும். எனவேதான் எலெக்ட்ரிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களுக்கு மாற பலரும் விரும்புகின்றனர். இருப்பினும் அவற்றின் விலை சற்று அதிகம்.

Maruti Suzuki Grand Vitara

ஆனால் அரசாங்கமோ, எலெக்ட்ரிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களுக்கு பொதுமக்கள் மாற வேண்டும் என்றுதான் விரும்புகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பதுதான் இதற்கு காரணம். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கலாம் என்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சனையையும் குறைக்க முடியும்.

எனவே எலெக்ட்ரிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 30 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் விலக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களுக்கு, சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் விலக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களின் ஆன்-ரோடு விலை (On-road Price) வெகுவாக குறையும். ஆனால் இந்த சலுகை இந்தியா முழுவதும் கிடையாது.

டெல்லியில் மட்டும்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டெல்லி எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0 (Delhi EV Policy 2.0), விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதற்காக ஏராளமான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் சலுகைகளை வழங்குவது அதில் ஒன்றாகும். வரும் 2030ம் ஆண்டு மார்ச் 31 வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என நாங்கள் கருதுகிறோம். சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்ற சலுகைகள், அவற்றின் பயன்பாட்டை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Monday, May 25, 2026, 13:21 [IST]
English summary
Petrol diesel price hike electric hybrid cars to get cheaper
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out