ஓனர்களுக்கு லாபத்தை அள்ளி தரும் எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம்! இனி ரோட்ல இதை அதிகமா பாக்கலாம்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்கள் (Electric Two-wheelers) மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு இணையாக எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்களும் (Electric Auto Rickshaws) தற்போது அதிக அளவில் விற்பனையாகி கொண்டுள்ளன. இந்திய சந்தையை பொறுத்தவரையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்களை விற்பனை செய்து வருகின்றன.

இதில், இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் (TVS) மற்றும் பஜாஜ் (Bajaj) போன்ற நிறுவனங்கள் எல்லாம் இங்கே குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்திய சாலைகளில் தற்போது டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்களை நம்மால் மிக அதிக அளவில் பார்க்க முடிகிறது.

Piaggio Ap WavE

இந்த வரிசையில் இத்தாலியை (Italy) சேர்ந்த பியாஜியோ (Piaggio) நிறுவனமும் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா சந்தையில் முன்னணியில் இருந்து வருகிறது. பியாஜியோ நிறுவனம் தற்போதைய நிலையில் அபே இ-சிட்டி ஸ்வாப்பபிள் மாடல் (Apé E-City Swappable Model), அபே இ-சிட்டி மேக்ஸ் (Apé E-City Maxx) மற்றும் அபே இ-சிட்டி அல்ட்ரா (Apé E-City Ultra) போன்ற எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்களை எல்லாம் விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவை பியாஜியோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது அபே வேவ் (Apé WavE) ஆகும். பியோஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள தகவல்களின்படி பார்த்தால், அபே வேவ் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவில் 5.4 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Piaggio Ap E-City Maxx

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவின் அதிகபட்ச பவர் அவுட்புட் 4.3 kW பவர் ஆகவும், 27 என்எம் டார்க் ஆகவும் உள்ளது. பியாஜியோ அபே வேவ் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவின் பேட்டரியை முழுமையாக நிரப்பினால் 140 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 3 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள் ஆகும்.

எனவே இரவில் சார்ஜ் நிரப்பி விட்டால், பகலில் ரேஞ்ச் பற்றிய பிரச்சனை இன்றி ஆட்டோ ரிக்ஸாவை இயக்க முடியும். மறுபக்கம் பியாஜியோ அபே வேவ் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும். பிக்-அப்பில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், 'பூஸ்ட் மோட்' ஆப்ஷனும், இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவில் உள்ளது.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில், வேகம் மற்றும் எவ்வளவு சார்ஜ் உள்ளது? என்பது போன்ற தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவை கண்காணிப்பதற்கு ஏதுவாக 'லைவ் டிராக்கிங்' போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய பியாஜியோ அபே வேவ் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவின் விலை 2.55 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால் பியாஜியோ அபே வேவ் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாவின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான முதலீட்டில் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பியாஜியோ அபே வேவ் நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸா என்பதால், இயக்குவதற்கு குறைவான செலவே ஆகும். எனவே தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Article Published On: Tuesday, July 7, 2026, 17:00 [IST]
English summary
Piaggio ape wave electric auto rickshaw launched in india price range features
மேலும்... #piaggio #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out