5 லட்ச ரூபாயில் கிடைக்குதுனு கண்ணை மூடிட்டு வாங்காதீங்க... டாடா டீலர்கள் மறைக்கும் விஷயங்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் டியாகோ காருக்கான புதிய அப்கிரேட்களை சமீபத்தில் வழங்கியுள்ளது. வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புற அலங்கரிப்புகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதுடன், கூடுதலான தொழிற்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காரை வாங்கலாம் என்பதற்கு இரு காரணங்கள் இருப்பதை போன்று, புதிய டியாகோவை வாங்கலாமா என சந்தேகப்பட வைக்கும் சில காரணங்களும் உள்ளன.

நகர்புறத்திற்கு ஏற்ற கார்

டாடா டியாகோ ஆனது அளவில் சிறியதாக உருவாக்கப்படும் ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த கார் ஆகும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் இந்த காரை எளிதாக ஓட்டிச் செல்ல முடிகிறது. இதற்கேற்ப ஸ்டீயரிங் சக்கரமும் எடைமிக்கதாக இல்லாமல் இலகுவானதாக உள்ளது. டிரைவர் இருக்கையில் இருந்து சாலையை பார்த்து வாகனம் ஓட்டுவதும் எளிதாக உள்ளதால் நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்க ஏற்றதாக இருக்கும்.

pros and cons of tata tiago facelift hatchback car

புதிய டியாகோவில் வழங்கப்படும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது மேம்பட்டதாக வழங்கப்படுவதுடன், AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் நன்றாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால், தினசரி நகர்புற பயணங்களுக்கு மலிவான ஹேட்ச்பேக் காரை எதிர்பார்ப்போர்க்கு புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்றதாக இருக்கும். அதேநேரம், இந்த காரின் கேபின் ஆனது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப ஆடம்பரமாக உள்ளது.

ஆடம்பரமான கேபின்

புதிய மேம்படுத்தப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் மிக முக்கியமான மேம்பாடு என்றால் அதன் அப்டேட் செய்யப்பட்ட கேபின் ஆகும். குறிப்பாக, புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள டாஷ்போர்டு, காணும் எவரொருவரையும் வசீகரிக்கக் கூடியதாக உள்ளது. காருக்குள் கேபின் மொத்தமும் இளம் கிரே நிறத்திலான அப்ஹோல்ஸ்டரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

pros and cons of tata tiago facelift hatchback car

டாஷ்போர்டுக்கு ஏற்ப காரின் செண்டர் கன்சோல் பகுதியின் டிசைனும் திருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன், ஆங்காங்கே ஸ்டோரேஜ் பகுதிகள், பின்பக்கத்தில் ஏசி வெண்ட்கள், இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் 65 வாட்ஸ் USB-C சார்ஜிங் வசதி உள்ளிட்டவை தினந்தோறும் இந்த காரை பயன்படுத்துவதற்கு ஏதுவாக வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம், புதிய டியாகோவின் டாப் வேரியண்ட்களில் 10.25 இன்ச்சில் தொடுத்திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி, வயர்லெஸ் சார்ஜர், 360-டிகிரி கேமரா மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதியை கூடுதலாக பெறலாம்.

பெட்ரோல் என்ஜின் பெரியதாக சிறப்பாக இல்லை

டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் கிடைக்கும் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது தினசரி பயணத்திற்கு தேவையான போதுமான செயல்படுதிறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த பெட்ரோல் என்ஜினை இன்னும் சிறப்பானதாக மேம்படுத்தி இருக்கலாம் என்பது எங்களது பரிந்துரை ஆகும். ஏனெனில், விற்பனையில் போட்டியாக உள்ள கார்களின் பெட்ரோல் என்ஜின்கள் அவ்வப்போது அப்கிரேட் செய்யப்பட்டு இன்றைய கால மாடர்ன் தரத்தில் உள்ளன.

புதிய டியாகோவிலும், என்ஜின் இயக்கத்தில் இருக்கும்போது கார் ஓய்வு நிலையில் இருந்தால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, டியாகோவின் 3-சிலிண்டர் என்ஜினின் உறுமும் சத்தமும் சிறப்பாக உள்ளது. நகர்புறத்தில் ஓட்டுவதற்கும், நெடுஞ்சாலை பயணங்களுக்கும் புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆற்றல் போதுமானதாக இருந்தாலும், இந்த டாடா காருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள கார்களின் பெட்ரோல் என்ஜின்களையும் ஓட்டிப் பார்க்கலாம்.

பின் இருக்கை வரிசையில் குறைப்பாடுகள்

டியாகோ கார் ஃபேஸ்லிஃப்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருப்பினும் இன்னமும் அட்ஜெஸ் செய்யக்கூடிய தலையணைகள் மற்றும் லோடு-செல் சென்சார்கள் உள்ளிட்டவற்றை பெறாமல் உள்ளது. டியாகோவில் இப்போது 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் உள்ளிட்டவை வழங்கப்படும் நிலையில், அட்ஜெஸ் செய்யக்கூடிய தலையணைகள் மற்றும் லோடு-செல் சென்சார்கள் இல்லாதது பெரிய குறையாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த நம்பிக்கை உடன் அறிமுகம் செய்துள்ள புதிய டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்குவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இருப்பினும், இந்த காரை வாங்காமல் தவிர்ப்பதற்கான காரணங்களும் இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த தொகுப்பை பார்த்த பின், புதிய டியாகோ காரை வாங்கும் முடிவில் உள்ளீர்களா? இல்லையா? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Sunday, June 7, 2026, 20:52 [IST]
English summary
Pros and cons of tata motors newly launched tiago facelift hatchback car
மேலும்... #tata motors #hatchback car #tiago #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out