பவர்ஃபுல் ரேஞ்ச்ரோவர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... 600 கிமீ ரேஞ்ச், ரூ.10 லட்சத்துடன் புக்கிங்!!

உலக அளவில் பிரிமீயம் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் ரேஞ்ச்ரோவர் முத்திரை பதித்த மாடலாக வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 56 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போது பேட்டரியில் இயங்கும் ரேஞ்ச்ரோவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை பெட்ரோல், டீசல் மற்றும் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது முதல்முறையாக பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புக்கிங் தொகை

பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத பெர்ஃபார்மென்ஸ், பிரிமீயம் அம்சங்களுடன் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலுக்கு இந்தியா உள்பட உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.10 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Range Rover EV

வேரியண்ட்டுகள்

இந்தியாவில் இந்த கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவுக்கான ரேஞ்ச்ரோவர் எலெக்ட்ரிக் மாடலில் பல்வேறு வேரியண்ட்டுகள் முன்பதிவுக்கு கிடைக்கின்றன. ஸ்டாண்டர்டு வீல்பேஸ் மாடல், ஆட்டோபயோகிராபி மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

Also Read

அதேபோல், லாங் வீல்பேஸ் மாடல் SV, SV Ultra மற்றும் SV Black ஆகிய வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் எடிஷன் மாடலை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Belgravia Green, Santorini Black மற்றும் Varesine Blue உள்ளிட்ட வெளிப்புற நிறங்கள் வழங்கப்படுகின்றன.

Range Rover EV

ரேஞ்ச்

ரேஞ்ச்ரோவர் எலெக்ட்ரிக் காரில் அதிக மின்சேமிப்பு திறன் கொண்ட 118.5 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சோதனை முறையில் அதிகபட்சமாக 600 கிமீ வரை பயணிக்க முடியும் என ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடைமுறை பயன்பாட்டில் 535 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. இவை இணைந்து சுமார் 543 முதல் 550 எச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வழங்குகின்றன. இதன் மூலம் 0-100 கிமீ வேகத்தை சுமார் 4.5 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டதாக உள்ளது.

Range Rover EV

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த பவர்ஃபுல் எலெக்ட்ரிக் காரில் உள்ல பேட்டரியை 350kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது. இந்த அதிவேக சார்ஜரை பயன்படுத்தும்போது, பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சுமார் 22 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். ரேஞ்ச்ரோவர் என்பதற்கே உரிய ஆஃப்ரோடு திறன்களிலும் இந்த எலெக்ட்ரிக் மாடல் சமரசம் செய்யவில்லை. ஏர் சஸ்பென்ஷன், டெரைன் ரெஸ்பான்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன், 850 மிமீ ஆழம் வரையிலான தண்ணீரிலும் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.

Also Read

இந்தியாவில் ரேஞ்ச்ரோவர் எலெக்ட்ரிக் காரின் இறுதி விலை மற்றும் டெலிவரி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இருப்பினும், ரூ.10 லட்சம் புக்கிங் தொகையுடன் இந்திய சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் இது புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், இந்த காருக்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, September 3, 2026, 10:07 [IST]
English summary
Range rover electric india bookings open range features specifications
மேலும்... #new launches #electric car #land rover
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X