இந்தியர்களின் கைகளால் அசெம்பிள் ஆகும் ரேஞ்ச் ரோவர் கார்... பக்கத்து நாடுகள் எல்லாம் பொறாமையில் வேகுது!
லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் அதன் பிரபலமான ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் (Assemble) செய்து விற்பனை செய்ய கடந்த சில வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. அதாவது, ரேஞ்ச் ரோவர் கார்களை பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து, இந்தியாவில் முழு காராக அசெம்பிள் செய்து விற்பனை செய்வதாகும்.
முழு காராக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து விற்பனை செய்வதை காட்டிலும் இவ்வாறு அசெம்பிள் செய்து விற்பனை செய்வதன் மூலமாக கார்களின் விலைகளை குறைவாக நிர்ணயிப்பதன் மூலமாக, ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் சமீப காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. ஒவ்வொரு ரேஞ்ச் ரோவர் கார் வேரியண்ட்களாக இந்தியாவில் அசெம்பிள் செய்ய துவங்கப்பட்டுவரும் நிலையில், முதல்முறையாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி (Sport Autobiography) கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்ய துவங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங்குகளும் துவங்கப்பட்டுள்ளன. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் ஆட்டோபயோகிராபி வெர்ஷன் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்தியாவில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி கார் விற்பனை செய்யப்படுகிறது.
அவற்றுள் அளவில் பெரியதான 4.4 லிட்டர் வி8 என்ஜின் உடனான ஆட்டோபயோகிராபி கார் ஆனது வழக்கம்போல் நேரடியாக வெளிநாட்டில் இருந்து முழு காராக கொண்டுவரப்பட்டு இந்தியாவில் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. மற்ற 3 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் ஆப்ஷனில் காரை புக் செய்பவர்களுக்கு ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி கார்கள் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு டெலிவிரி (Delivery) செய்யப்பட உள்ளன.

இதில், 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இந்த ரேஞ்ச் ரோவர் காரில் அதிகப்பட்சமாக 400 எச்பி மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் இந்த காரில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை குறைந்தப்பட்சம் 5.5 வினாடிகளில் எட்டிவிட முடியும்.
3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 242கிமீ ஆகும். மறுப்பக்கம், 3 லிட்டர் டீசல் என்ஜின் உடன் இந்த காரில் அதிகப்பட்சமாக 351 எச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
இந்த டீசல் என்ஜின் உடன் 0-இல் இருந்து 100kmph வேகத்தை 5.8 வினாடிகளில் எட்ட முடிவது மட்டுமின்றி, அதிகப்பட்சமாக மணிக்கு 234கிமீ வேகத்தை அடையலாம். வழக்கமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் உடன் ஒப்பிடுகையில், ஆட்டோபயோகிராபி வேரியண்ட் ஆனது சில பிரத்யேகமான ஹைலைட்களை தோற்றத்தில் கொண்டுள்ளது.
அவற்றில் முக்கியமானது, சாடின் கருப்பு நிற ஃபினிஷிங் செய்யப்பட்ட 22-இன்ச் அலாய் சக்கரங்கள் ஆகும். சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் உடன் கிடைக்கும் இந்த சக்கரங்களில் ஆட்டோபயோகிராபி பேட்ஜ் வழங்கப்படுகிறது. இவற்றுடன், டைனமிக் பேக் (Dynamic Pack) மற்றும் மென்மையாக மூடக்கூடிய கதவுகளை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி பெறுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படுவதால் குறைக்கப்பட்ட விலையே ரூ.1.6 கோடி என்றால், லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராபி கார் எந்த அளவிற்கு லக்சரியானது என்பதை அறியலாம். இத்தகைய சொகுசு கார் இந்தியாவில் அசெம்பிள் செய்ய துவங்கப்பட்டு இருப்பது, இந்திய நாட்டின் கார்கள் உற்பத்தி துறை அடைந்திருக்கும் வளர்ச்சியை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications