புக்கிங் போட பலர் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்கள்! லிஸ்ட்டில் முதலாவதாக கியா கார்!
இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு வலுக்கட்டாயமாக மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், ஹைப்ரீட் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால் நீங்கள் CNG கார் வேண்டாம் என புதிய எலெக்ட்ரிக் காருக்கு காத்திருக்க முடிவெடுத்தால், இந்த ஏழு எலெக்ட்ரிக் கார்களுக்காக காத்திருக்கலாம்.
கியா சிரோஸ் இவி (Kia Syros EV): கியா நிறுவனத்தின் எம்பிவி வகையை சேர்ந்த காரான சிரோஸ் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் எலெக்ட்ரிக் வெர்சனின் அறிமுகம் பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சிரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் வருகிற ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட்டில் இருந்து டெலிவிரி செய்யப்படலாம்.

ஹோண்டா 0 ஆல்பா (Honda 0 Alpha): ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா பார்த்து பார்த்து உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இந்திய சந்தையில் இது இந்த 2026ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027இன் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17 லட்சத்தில் இருந்து ரூ.22 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.
ஹூண்டாய் இன்ஸ்டர் (Hyundai Inster): ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அளவில் சிறியதாக, குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இன்ஸ்டர் என்கிற பெயரில் வெளிவரும் இந்த காரின் அறிமுகம் 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சியரா இவி (Tata Sierra EV): இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் கார்களுள் இது முக்கியமானது ஆகும். ஏனெனில், பெட்ரோல்/ டீசல் ஆப்ஷன்களை கொண்ட சியரா கார் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போதைய சியராவின் அதே தோற்றத்தில், 55kWh, 65kWh மற்றும் 75kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் சியரா இவி அறிமுகம் செய்யப்படலாம்.
மாருதி சுஸுகி ஒய்.எம்.சி (Maruti Suzuki YMC): இது இந்த புதிய மாருதி எலெக்ட்ரிக் காரின் பெயர் கிடையாது; தற்போதைக்கு சூட்டப்பட்டிருக்கும் தற்காலிக பெயரே ஆகும். இது 7 இருக்கைகளை கொண்ட அளவில் பெரியதான எம்பிவி ரக எலெக்ட்ரிக் காராக உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் அறிமுகத்தை 2027ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு உள்ளாக எதிர்பார்க்கிறோம்.
மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார் இதுவாகும். விஷன் எஸ் ஆனது தற்போதைக்கு கான்செப்ட் வடிவமாக உள்ளது. மஹிந்திராவின் NU_IQ மாடுலர் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டதாக இருக்கும்.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் இவி (Marui Suzuki Fronx EV): பிரபலமான பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபிரான்க்ஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சன் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இதன் அறிமுக தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் 2027ஆம் ஆண்டில் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் எதிர்கால போக்குவரத்து எலெக்ட்ரிக்கை சார்ந்துதான் இருக்க போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதற்கு இடையில் அறிமுகம் செய்யப்படுபவை தான் இந்த CNG கார்கள் எல்லாம். ஆதலால், நீங்கள் நேரடியாக ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்குவதாக இருந்தால், மேற்கூறப்பட்ட புதிய எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications