பென்ஸ் கார் மாதிரி இருந்தாலும் மாருதி கார் விலையில்தான் வர போகுது! போட்டி நிறுவனங்கள் நடைய கட்ட வேண்டியதுதான்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Metre Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அடுத்த ஆண்டு (2027), ரெனால்ட் பிரிட்ஜர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக ரெனால்ட் நிறுவனம் பிரிட்ஜர் காரின் டிசைன் காப்புரிமைக்கு இந்தியாவில் தற்போது விண்ணப்பம் செய்துள்ளது. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரெனால்ட் பிரிட்ஜர் கார் ஏராளமான பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் (Powertrain Options) உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Renault Bridger

அதாவது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், டர்போ பெட்ரோல், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என மொத்தம் 5 பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் உடன் ரெனால்ட் பிரிட்ஜர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மாடலில் 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலிலும் 1.2 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய மாடல்களிலும் 1.2 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Renault Bridger SUV

இதில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின்கள் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும். அனேகமாக இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்களின் மைலேஜூம் ஒரு லிட்டருக்கு 30 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ரெனால்ட் பிரிட்ஜர் கார் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினையும் கொண்டிருக்கும்.

இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை ரெனால்ட் பிரிட்ஜர் பெறவுள்ளது. இதில், 35 kWh மற்றும் 55 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் முறையே 350 கிலோ மீட்டர்கள் மற்றும் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் பிரிட்ஜர் காரின் ஆரம்ப விலை (Price) அனேகமாக வெறும் 7 அல்லது 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் மஹிந்திரா விஷன் எஸ் (Mahindra Vision S) கான்செப்ட் அடிப்படையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

அத்துடன் தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சைரோஸ் (Kia Syros), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கும் இது விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Monday, May 25, 2026, 18:39 [IST]
English summary
Renault bridger design patented in india expected price powertrain options
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out