6 லட்சம் ரூபாய் விலை.. 30 கிமீ மைலேஜ்.. ஹைபிரிட் பவர்ட்ரெயின்.. புதிய எஸ்யூவி!

இப்போது இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்குத் தான் டிமாண்டு அதிகமாக உள்ளது. சரியான விலையில், போதுமான அம்சங்களுடன், வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்க வேண்டியது மட்டும் தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேலை. விற்பனையை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த சரியான லைனைப் பிடிப்பது தான் பிரச்சினை. அது தான் நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வராத கலையாக இருக்கிறது.

இந்த நிலையில், புதிய எஸ்யூவி ஒன்றின் மூலமாக மீண்டும் முயற்சி செய்யவிருக்கிறது ரெனோ (Renault). ஏற்கனவே கைகர் (Kiger) என்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். ஆனால் இந்த எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்களிடம் அந்தளவிற்கு வரவேற்பில்லை. இந்த நிலையில் தான் பிரிட்ஜர் (Bridger) என்ற புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.

Renault Bridger Concept

யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு பவர்ட்ரெயின் தேர்வுகளை இந்த பிரிட்ஜஸ் எஸ்யூவியில் கொடுக்கவிருக்கிறது அந்நிறுவனம். தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி, நான்கு விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளை இந்தப் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். இது மட்டுமின்றி மிகவும் குறைவான விலையிலும் இந்தக் காரை வெளியிட ரெனோ முயற்சி செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்னென்ன பவர்ட்ரெயின் தேர்வுகள்?

முதலில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் இந்தக் காரின் முதன்மையான ஒன்றாக இருக்கும். இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினின், நேச்சுரலி அஸ்பிரேட்டட் வடிவத்தையும் நாம் எதிர்பார்க்கலாம். அதாவது 1.2 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Renault Bridger Concept

இந்த இரண்டு இன்ஜின்களில் ஒன்று CNG பவர்ட்ரெயினாகவும் கொடுக்கப்படவுள்ளது. குறிப்பாக டர்போ பெட்ரோல் இன்ஜினே CNG எரிபொருளிலும் இயங்கும் வகையில் மாற்றிப் பயன்படுத்தப்படலாம் என்றே தெரிகிறது. இறுதியாக 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட பவர்ட்ரெயின் ஒன்றையும் பிரிட்ஜர் எஸ்யூவியில் ரெனோ கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ஹைபிரிட் பவர்ட்ரெயின் தான் பிரிட்ஜரின் அதிக மைலேஜ் கொடுக்கும் ஒன்றாகவும் இருக்கும். லிட்டருக்கு சுமார் 30 கிமீ வரையிலான மைலேஜ் கொடுக்கக்கூடிய ஒன்றாக இது இருக்கும். இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயின் ரெனோ சொந்தமாக உருவாக்கும் ஒன்று கிடையாது. ஹார்ஸ் பவர்ட்ரெயின் என்ற நிறுவனத்தின் இன்ஜினை ரெனோ பயன்படுத்தவிருக்கிறது.

இத்தனை இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டும் பிரிட்ஜர் வெளியாகும் பட்சத்தில் சந்தையையே ஒரு கலக்கு கலக்கிவிடும். சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் தான் தற்போது போட்டி அதிகமாக இருந்து வருகிறது. எனவே பிரிட்ஜர் தனித்துத் தெரிய இதுவொரு நல்ல வாய்ப்பு தான். ஆனால் விலையில் ரெனோ கவனமாக இருக்க வேண்டும். நிறைய நிறுவனங்கள் சறுக்குவது அந்த இடத்தில் தான்.

ஸ்கோடா கைலாக்கில் அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டது. டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் குறைவான விலையில் கிடைக்கும் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களில் ஒன்றாக, வெற்றிகரமான எஸ்யூவிக்களில் ஒன்றாக தற்போது வலம் வருகிறது கைலாக். ரெனோவின் டஸ்டர் தான் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ஒரு எஸ்யூவி. அதனை முறியடிக்க பிரிட்ஜருக்கு வாய்ப்பிருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரிட்ஜர் எஸ்யூவியின் டிசைனே ஒருவகையில் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கிறது. சரியாக மட்டும் பிளேஸ் செய்யப்பட்டால், கண்டிப்பாக வெற்றிகரமான எஸ்யூவியாக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்டுள்ளது பிரிட்ஜர். தற்போது வரை சரியான பாதையிலேயே நகர்ந்து வருகிறது அந்நிறுவனம். ரெனோ பாஸா, ஃபெயிலா என்பது அடுத்தாண்டு இறுதியில் தெரிந்துவிடும்.

Article Published On: Friday, June 26, 2026, 19:28 [IST]
English summary
Renault bridger may get four powertrain options including high mileage hybrid
மேலும்... #renault #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out