இந்த காரை வெறும் 6 லட்சத்துக்கு விக்க போறாங்களா! டாடா, மாருதிக்கு இப்பவே பயத்துல நடுக்கம் எடுத்திருக்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளன.

ரெனால்ட் பிரிட்ஜர் கார் RGMP பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. Renault Group Modular Platform என்பதன் சுருக்கம்தான் RGMP ஆகும். இந்த பிளாட்பார்ம் பல்வேறு பவர்ட்ரெயின்களுக்கும் ஏற்றதாக இருக்கும். எனவே பெட்ரோல், சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் என மொத்தம் 4 பவர்ட்ரெயின்களில் ரெனால்ட் பிரிட்ஜர் கார் உருவாக்கப்படவுள்ளது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Renault Bridger SUV

ரெனால்ட் பிரிட்ஜர் காரின் பெட்ரோல் வெர்ஷன்களில், புதிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 1.2 லிட்டர் டர்போ இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபக்கம் இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த 2025-26ம் நிதியாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்களில் 21.98 சதவீதம் சிஎன்ஜி கார்கள் ஆகும். ஆனால் டீசல் கார்களின் விற்பனையோ வெறும் 18.08 சதவீதமாக மட்டுமே உள்ளது. டீசல் கார்களை விட சிஎன்ஜி கார்கள் அதிக அளவில் விற்பனையாவதை இந்த புள்ளி விபரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Renault Bridger

எனவே பிரிட்ஜர் காரின் சிஎன்ஜி வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் விரும்புகிறது. இதற்கு அடுத்தபடியாக பிரிட்ஜர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் சர்வதேச சந்தைகளில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்து கொண்டுதான் உள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரில் கூட, வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதே நேரத்தில் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான், இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

ரெனால்ட் நிறுவனம் பிரிட்ஜர் காரின் பெட்ரோல் வெர்ஷனை அடுத்த ஆண்டு (2027) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதன் பின்னர் சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரவுள்ளன. ரெனால்ட் பிரிட்ஜர் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் அல்லது 7 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ரெனால்ட் பிரிட்ஜர் காரின் நேரடி போட்டி மாடல்களான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் நிறுவனம் பிரிட்ஜர் காரில், ஒரு பவர்ட்ரெயின் உடன் நிற்காமல், பல்வேறு பவர்ட்ரெயின்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவர முடியும். எனவே இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ரெனால்ட் நிறுவனத்தின் காராக பிரிட்ஜர் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

Article Published On: Monday, April 27, 2026, 12:14 [IST]
English summary
Renault bridger to get petrol cng hybrid and ev powertrain options all details
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+