மாருதி கார்களை இதுக்கு அப்புறம் ஒருத்தரும் வாங்க போறது இல்ல! எங்க பார்த்தாலும் ஓட போகும் சென்னை கம்பெனி கார்ஸ்
ரெனால்ட் (Renault), உலகளவில் வரவேற்பை பெற்ற பிரெஞ்சு கார் நிறுவனம். ஆனால், இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்தே போராடி வருகிறது. இருப்பினும், ரெனால்ட் நிறுவனத்தின் முயற்சிகள் ஓய்ந்த பாடில்லை. அந்த வரிசையில், தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்கள் அனைத்தையும் விரைவில் முற்றிலுமாக மாற்றியமைக்க ரெனால்ட் முடிவு செய்துள்ளது. அதாவது, அந்த அளவிற்கு இந்தியாவில் மிக பெரிய மாற்றத்தை ரெனால்ட் மேற்கொள்ள உள்ளது.
இதற்காக, சுருக்கமாக RGEP எனப்படும் ரெனால்ட் க்ரூப் எண்ட்ரி பிளாட்ஃபாரத்தை ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'ஃபியுச்சரெடி' (FutuReady) என்கிற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் 7 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ரெனால்ட் தெரிவித்துள்ளது. இதற்கு புதிய RGEP பயன்படுத்தப்படும். இதன் மூலமாக, ரெனால்ட் கார்களில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்பது குறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

குறைந்த விலையில் கார்கள்: புதிய RGEP ஆனது பிரத்யேகமாக விலை குறைவான கார்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக புதிய கார்களை ரூ.10 லட்சத்திற்குள் ரெனால்ட் நிறுவனத்தால் கொண்டுவர முடியும். இதற்காக, கார்களை சுமார் 90% இந்தியாவில் கிடைக்கும் பாகங்கள் கொண்டு உருவாக்கக்கூடியதாக இந்த RGEP வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு உடலமைப்புகளில் கார்கள்: குறைந்த விலையிலான கார்கள் மட்டுமின்றி, RGEP ஆனது பல்வேறு விதமான உடலமைப்புகளில் கார்களை உருவாக்கவும் வழிவகை செய்யக் கூடியது ஆகும். இதனால், ஹேட்ச்பேக் (Hatchback), எஸ்யூவி (SUV), எம்பிவி (MPV) என வெவ்வேறு விதமான உடலமைப்புகளில் கார்களை ரெனால்ட் நிறுவனத்தால் உருவாக்க முடியும்.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் கைகர் கார்கள் அவ்வாறு பல்வேறு விதமான உடலமைப்புகளையே கொண்டுள்ளன. ஆதலால், அவற்றை RGEP மூலம் புதிய தோற்றத்திற்கு மாற்றுவது சாத்தியமானதே. குறிப்பாக, எஸ்யூவி உடலமைப்பில் இந்த பிளாட்ஃபாரத்தில் இருந்து நிறைய புதிய ரெனால்ட் கார்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
பல்வேறு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்கள்: ரெனால்ட்டின் புதிய RGEP ஆனது பல்நோக்கு திறன் கொண்டது ஆகும். இதில் உருவாக்கப்படும் கார்களில் பெட்ரோல், டீசல் என்ஜின்களை பொருத்துவது மட்டுமின்றி, சிஎன்ஜி (CNG), ஹைப்ரீட் (Hybrid) பவர்டிரெயின்கள் உள்பட எலெக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை கூட உருவாக்கலாம்.
சிஎன்ஜி கார்களில் இரு சிஎன்ஜி சிலிண்டர்களை காரின் பின்பக்கத்தில் வழங்குவது போன்று இந்த பிளாட்ஃபாரம் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட்ஸ்பேஸ் (Bootspace) பகுதியில் அதிக இடவசதியை பெற முடியும். மேலும், RGEP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் கார்கள் 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் என இரண்டிற்கும் வழிவகுக்கக் கூடியது ஆகும்.
மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள்: பட்ஜெட் விலையிலான கார்களில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை வழங்க இயலாததுதான் பெரிய குறையாக இருந்து வருகிறது. ஆனால், RGEP-இல் உருவாக்கப்படும் கார்களில் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரைகள், கனெக்டட் கார் தொழிற்நுட்பம் மற்றும் அடாஸ் (ADAS)-ஐ கூட வழங்க முடியும் என்கிறது ரெனால்ட் நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்சமயம் ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் கைகர் கார்கள் சி.எம்.எஃப்-ஏ பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவை 2027ஆம் ஆண்டில் இருந்து புதிய RGEP-க்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலமாக, கைகர் மற்றும் டிரைபர் கார்கள் சிறிய அளவிலான 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களை பெறலாம். அதேபோல், க்விட் காரில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களுடன், க்விட் இவி எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








