டஸ்டர் கார் சோதனை செய்யப்பட்ட லே பகுதியை கௌரவித்த ரெனால்ட்! இதை ஓட்றவங்க ரோட்ல தனியா தெரிவாங்க!

பொதுவாக கார் நிறுவனங்கள் சில சமயங்களில் தங்கள் தயாரிப்புகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும். ஸ்டாண்டர்டு மாடல்களில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் சற்று தனித்து தெரியும். விற்பனையில் புதிய மைல்கற்களை எட்டும்போதும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாகவும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் களமிறக்கப்படும்.

அத்துடன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் சில சமயங்களில் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த வகையில் ரெனால்ட் டஸ்டர்(Renault Duster) காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது இந்திய சந்தைக்கு மீண்டும் வந்துள்ளது.

Renault Duster Adventure Edition Launched

2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை கடந்த 2022ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு ரெனால்ட் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடல் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது ரெனால்ட் டஸ்டர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்ஜர் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் டஸ்டர் காரின் அட்வென்ஜர் எடிசன் மாடலில் மொத்தம் 3 பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Renault Duster Adventure Edition

அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்/மேனுவல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல்/மேனுவல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் ஆகியவை ஆகும். அவற்றின் விலை முறையே 12.99 லட்ச ரூபாய், 13.99 லட்ச ரூபாய் மற்றும் 15.39 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ரெனால்ட் டஸ்டர் காரின் அட்வென்ஜர் எடிசன் மாடலில் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்கள், எலெக்ட்ரிக் பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டாண்டர்டு ரெனால்ட் டஸ்டர் உடன் ஒப்பிடும்போது, அட்வென்ஜர் எடிசன் மாடலின் இன்ஜின், கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் ஸ்டாண்டர்டு ரெனால்ட் டஸ்டர் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், அட்வென்ஜர் எடிசன் மாடலில் காஸ்மெட்டிக் அப்டேட்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.

அதாவது புவியின் நிலப்பரப்பில் ஒரு இடத்தை துல்லியமாக குறிப்பிட பயன்படுத்தப்படும் 'ஜியோகிராபிக்கல் கோஆர்டினேட்ஸ்' (Geographical Coordinates) போன்றவை எல்லாம் ரெனால்ட் டஸ்டர் காரின் அட்வென்ஜர் எடிசன் மாடலில் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் புரியும்படி சொல்வதென்றால், ரெனால்ட் டஸ்டர் காரின் அட்வென்ஜர் எடிசன் மாடலின் பின் பகுதியில் லே பகுதியின் 'ஜியோகிராபிக்கல் கோஆர்டினேட்ஸ்' குறிப்பிடப்பட்டுள்ளது.

அது 34.27 N, 77.60 E ஆகும். லே போன்ற சவாலான நிலப்பரப்புகளில்தான் ரெனால்ட் டஸ்டர் கார் சோதனை செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரெனால்ட் டஸ்டர் கார் சோதனை செய்யப்பட்ட லே போன்ற சவாலான நிலப்பரப்புகளை கௌரவிக்கும் வகையில்தான் அட்வென்ஜர் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வழக்கமான ரெனால்ட் டஸ்டர் காரிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அட்வென்ஜர் எடிசன் மாடலை தேர்வு செய்யலாம். ரெனால்ட் நிறுவனம் அடுத்ததாக டஸ்டர் காரில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த புதிய இன்ஜின் ஆப்ஷனை நாம் எதிர்பார்க்கலாம்.

Article Published On: Tuesday, July 14, 2026, 13:00 [IST]
English summary
Renault duster adventure edition launched in india price features engine gearbox options
மேலும்... #renault #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out