10.49 லட்சத்தில் இருந்து விலை துவங்குது... ரெனால்ட்டின் புதிய 5-சீட்டர் கார் எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து புதியதாக டஸ்டர் (Duster) கார் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது இந்திய கார் மார்க்கெட்டில் பலத்த கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. 4 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்து இருப்பதினாலேயே புதிய டஸ்டரை பலரும் போட்டி போட்டு முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், குறுகிய காலத்தில் இந்த காருக்கு அதிக முன்பதிவுகள் குவியும் என எதிர்பார்க்கிறோம்.

இருப்பினும், சிலருக்கு புதிய ரெனால்ட் டஸ்டர் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குவது என்கிற குழப்பம் இருக்கலாம். ஏனெனில், அதென்டிக், எவால்யூஷன், டெக்னோ, டெக்னோ+ மற்றும் ஐகானிக் என ஐந்து விதமான வேரியண்ட்களில் புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களை பெறலாம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

new renault duster variants

அதென்டிக் (Authentic): புதிய டஸ்டரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான இது 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.10.49 லட்சமாக உள்ளது. விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், இதில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காரின் முன்பக்கத்திற்கு அடியில் ஸ்கிட் பிளேட்கள், 17-இன்ச் சக்கரங்கள், காருக்கு உள்ளே டாஷ்போர்டில் 7-இன்ச் டிஎஃப்டி டிரைவர் டிஸ்பிளே, மடிப்பதற்கு டெலெஸ்கோபிக் அட்ஜெஸ்மெண்ட் வசதி கொண்ட ஸ்டீயரிங் சக்கரம், அனைத்து கதவுகளிலும் பவர் ஜன்னல் கண்ணாடிகள், பின்பக்க ஏசி வெண்ட்கள், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 35 பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றையும் அதென்டிக் வேரியண்ட்டில் பெறலாம்.

new renault duster variants

எவால்யூஷன் (Evolution): இது 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமின்றி, 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.69 லட்சத்தில் இருந்து ரூ.14.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதென்டிக் வேரியண்ட்டில் வழங்கப்படுவதுடன் எவால்யூஷன் வேரியண்ட்டில் கூடுதலாக எல்இடி கனெக்டட் டெயில்லைட், 17-இன்ச் அலாய் சக்கரங்கள், ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை, கண்ட்ரோல்கள் உடன் ஸ்டீயரிங் சக்கரம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, க்ரூஸ் கண்ட்ரோல், ரியர்-வியூ கேமரா, ஸ்பீடு லிமிட்டர் உள்ளிட்டவையும், டிசிடி கியர்பாக்ஸ் உடன் வாங்கினால் இன்னும் கூடுதலாக பெடில் ஷிஃப்டர்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பவர் பிரேக்கையும் பெறலாம்.

டெக்னோ & டெக்னோ+ (Techno & Techno+): புதிய டஸ்டரின் மிட்-வேரியண்ட்களான இவற்றில் டெக்னோ மட்டும் இரு என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கிறது. அதுவே, டெக்னோ+ ஆனது 1.3 லிட்டர் என்ஜின் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும்; 1 லிட்டர் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்காது.

இந்த டெக்னோ வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.49 லட்சத்தில் இருந்து ரூ.16.69 லட்சம் வரையில் இருக்கும் நிலையில், இந்த வேரியண்ட்களில் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள் மற்றும் பெடில் லேம்ப்கள், எலெக்ட்ரிக் பனோராமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, கனெக்டட் கார் தொழிற்நுட்பம், எளிமையான ஆக்ஸஸ் கார்டு எண்ட்ரி, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, முன் & பக்கவாட்டாக காரை நிறுத்துவதற்கான உதவி, ஏறுமுகமான சாலைகளில் ஏறுவதற்கான கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பிரத்யேகமாக பெறலாம்.

ஐகானிக் (Iconic): புதிய டஸ்டரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான இதனை 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்க முடியாது. 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.99 லட்சம் மற்றும் ரூ.18.49 லட்சமாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

இந்த டாப் வேரியண்ட்டில் மற்ற எந்த வேரியண்ட்டிலும் கிடைக்காத 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், காரின் பக்கவாட்டில் அலங்கரிப்புகள், லெதரேட்டால் அலங்கரிக்கப்பட்ட டாஷ்போர்டு & இருக்கைகள், கூகுள் பில்ட்-இன் உடன் ஓபன்ஆர் லிங்க் (OpenR Link), 10.25-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை, பவர்டு & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், பல்வேறு விதமான டிரைவிங் மோட்கள், 360-டிகிரி கேமரா, 17 வசதிகள் உடன் லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் பாதுகாப்பு ஸ்விட்ச் உள்ளிட்டவற்றை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்வேறு விதமான பொருளாதார நிலையில் உள்ளவர்கள் வாங்கக்கூடிய வகையில் பல்வேறு விதமான விலைகளில் டஸ்டர் காரின் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆதலால், உங்களுக்கு ஏற்ற விலைகளில் புதிய ரெனால்ட் டஸ்டர் காரை வாங்குவதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறோம். விலை குறைவான அதென்டிக் வேரியண்ட்டில் கூட ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருப்பது சிறப்பாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2026, 13:32 [IST]
English summary
Renault duster available in five variants which one should buy check all details here
மேலும்... #renault #renault duster #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+