ஒரே மாதத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போன ரெனால்ட் கார்! கஸ்டமர்கள் எண்ணிக்கை பாதியாக குறைவு!

ரெனால்ட் டஸ்டர் கார்களின் விற்பனை ஆனது புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் பார்த்து பார்த்து புதிய டஸ்டரை உருவாக்கி அறிமுகப்படுத்திய நிலையில், அதன் விற்பனை மீண்டும் குறைய துவங்கி இருப்பது குறித்து விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு கிடைத்துவரும் சிறப்பான வரவேற்பை பார்த்து மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் அதேபோன்று 4.3- 4.5 மீட்டர் நீளத்தில் நன்கு விசாலமான SUV கார்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றன. இவை போதுமான இடவசதிக்கும், ஆடம்பரமான இடவசதிக்கும் நடுவில் விசாலமான இடவசதியை வழங்கும் உட்புற கேபினை கொண்டவைகளாக உள்ளன.

renault duster car sales report 2026 may

மற்ற கார் நிறுவனங்களை போன்று, ரெனால்ட் நிறுவனமும் அதன் டஸ்டர் காரை இந்த SUV கார் பிரிவில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ரெனால்ட் கார்களுள் ஒன்றாக டஸ்டர் விளங்கினாலும், மற்ற SUV கார்கள் அளவிற்கு டஸ்டர் விற்பனையாகுவதில்லை. இருப்பினும், மனம் தளராமல் அவ்வப்போது டஸ்டரை ரெனால்ட் நிறுவனம் மேம்படுத்தி அறிமுகம் செய்கிறது.

அந்த வகையில், கடந்த 2026 மார்ச் மாதத்தில் நியூ ஜென்ரேஷன் டஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், தொழிற்நுட்ப வசதிகளும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, குறைந்த விலையில் டர்போ என்ஜின் உடன் டஸ்டரை வழங்கும் முயற்சியாக புதியதாக 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

renault duster car sales report 2026 may

இந்த புதிய அப்டேட்களினால், கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 1,402 டஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கடுத்த ஏப்ரல் மாதத்தில் 2,359 டஸ்டர் கார்கள் விற்பனையாகின. ஏனெனில், புதிய டஸ்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் தான் துவங்கப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் டஸ்டரின் விற்பனை அதிகரித்ததால் அது அதற்கடுத்த மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்த்தோம். ஆனால், கடந்த மே மாதத்தில் வெறும் 1,267 டஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2026 மார்ச் மாதத்தை காட்டிலும் குறைவு. கடந்த ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 1,092 டஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் கூட 2,502 டஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், அதில் பாதி எண்ணிக்கையிலான டஸ்டர்களே இந்த மே மாதத்தில் விற்பனையாகி உள்ளன. இத்தனைக்கும் இப்போது விற்பனையில் இருப்பது மேம்படுத்தப்பட்ட மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை ஒரே மாதத்தில் மீண்டும் சரிந்து இருப்பதற்கு முக்கிய காரணமாக, அதன் ஆரம்ப விலை அதிகரிக்கப்பட்டு இருப்பதை பார்க்கிறோம். முன்பு ரூ.8.49 லட்சத்தில் இருந்து கிடைத்துவந்த டஸ்டரின் ஆரம்ப விலை தற்போது ரூ.10.49 லட்சம் ஆகும். டர்போ என்ஜின் உடன் காரை வழங்குவதால் அதற்கேற்ப இவ்வாறு ஆரம்ப விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Sunday, June 14, 2026, 14:49 [IST]
English summary
Renault duster car sales report sold just 1267 units in may 2026
மேலும்... #renault #renault duster #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out