ஷோரூமில் அதிக விலை வேரியண்ட்டை தலையில் கட்ட பார்ப்பார்கள்... கம்மி விலையில் வாங்க இந்த வேரியண்ட்டே போதும்!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட டஸ்டர் (Duster) எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது. புதிய ரெனால்ட் டஸ்டர் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ள நிலையில், இந்த காரின் விலை குறைவான வேரியண்ட் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் காட்சித் தந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள புதிய டஸ்டர் காரின் விலை குறைவான வேரியண்ட்டான அதெண்டிக் (Authentic) நேரில் பார்க்க எப்படி இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமாக டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சித்தந்த டஸ்டர் அதெண்டிக் காரின் படங்களை பற்றி ஏற்கனவே முந்தைய தொகுப்பு ஒன்றில் பார்த்திருந்தோம்.

renault duster evolution variant

இந்த நிலையில், அதெண்டிக் வேரியண்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள டஸ்டர் எவால்யூஷன் (Evolution) வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் காட்சித் தந்துள்ளது. எவால்யூஷன் ஆனது புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் டஸ்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். அதாவது, அதெண்டிக் வேரியண்ட்டில் இந்த 1.3 லிட்டர் டர்போ என்ஜின் ஆப்ஷன் கிடைக்காது; அதனை பெற குறைந்தது எவால்யூஷன் வேரியண்ட்டை ஆவது நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

டஸ்டர் எவால்யூஷன் வேரியண்ட் காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஆனது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதேநேரம், சிறிய அளவிலான 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் குறைவான விலையில் இந்த எவால்யூஷன் வேரியண்ட் கிடைக்கிறது.

renault duster evolution variant

1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் டஸ்டர் எவால்யூஷன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.11.69 லட்சம் ஆகும். அதுவே, 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் + மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ரூ.12.99 லட்சம் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் + ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ரூ.14.49 லட்சம் ஆகும்.

வெளிப்பக்கத்தில், டஸ்டரின் இந்த எவால்யூஷன் வேரியண்ட் ஆனது கிட்டத்தட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன்படி, எல்இடி லோ பீம் & ஹலோஜன் ஹை பீம் ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்-கள் & டர்ன் இண்டிகேட்டர்கள், காரின் பின்பக்கத்தில் கனெக்டட் எல்இடி டெயில்லைட்ஸ், எல்இடி ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.

காரின் மேற்கூரையில் ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, 17-இன்ச் அலாய் சக்கரங்கள், பின்பக்கத்தில் டீஃபாகர், வாஷர் & வைபர் உள்ளிட்டவையும் இந்த வேரியண்ட்டில் உள்ளன. காருக்கு உள்ளே, புதிய டஸ்டரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை உடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்தப்பட்சம் இந்த எவால்யூஷன் வேரியண்ட்டை ஆவது தேர்வு செய்ய வேண்டும்.

10.1 இன்ச்சில் வழங்கப்படும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் 6 அர்கமைஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இதனுடன், டிரைவருக்கான விபரங்களை வழங்க 7-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை, வெளிப்புற கண்ணாடிகளை எலெக்ட்ரிக் பவர் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதி, ஆடியோ கண்ட்ரோல்கள் உடன் ஸ்டீயரிங் சக்கரம் உள்ளிட்டவையும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ரெனால்ட் டஸ்டர் காரை எப்படியாவது குறைந்த விலையிலாவது வாங்கிவிட வேண்டும் என விரும்புவோருக்கு எண்ட்ரி-லெவல் அதெண்டிக் வேரியண்ட்டே போதுமானதாக இருக்கும். அதேநேரம், சில ஆடம்பர வசதிகளை எதிர்பார்ப்போருக்கு இந்த எவால்யூஷன் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். மேலும், பவர்ஃபுல்லான புதிய 1.3 லிட்டர் டர்போ என்ஜின் உடன் டஸ்டரை வாங்க விரும்புபவர்களுக்கு ஆரம்ப விலையில் எவால்யூஷன் வேரியண்ட் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 20, 2026, 18:02 [IST]
English summary
Renault duster evolution variant arrived at dealership showroom check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+