160 எச்பி பவருடன் 29 கிமீ மைலேஜ் தருமாம் டஸ்ட்டர் ஹைப்ரிட்! வேறென்னங்க வேணும்?

இந்தியாவில் மீண்டும் வரவேற்பைப் பெற்று வரும் ரெனோ டஸ்ட்டர் (Renault Duster) எஸ்யூவி, தற்போது ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம் கவனம் ஈர்த்துள்ளது. இதன் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 29 கிமீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் எரிபொருள் செலவைக் குறைக்க விரும்பும் எஸ்யூவி வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய டஸ்ட்டர் ஹைப்ரிட் மாடல் வரும் அக்டோபர் 17 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிகழ்வின்போது காரின் விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே விற்பனையில் உள்ள டர்போ பெட்ரோல் மாடல்களுடன் சேர்த்து, ஹைப்ரிட் பதிப்பு மூன்றாவது எஞ்சின் தேர்வாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க உள்ளது.

Renault Duster

1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்!

இந்த டஸ்ட்டர் ஹைப்ரிட் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு மின்மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 1.4 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு இணைந்து 160 ஹெச்பி ஆற்றலையும் 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் மைலேஜுடன் செயல்திறனையும் வழங்க ரெனோ திட்டமிட்டுள்ளது.

இந்த காரின் முக்கிய சிறப்பம்சம் அதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம். நகரப் போக்குவரத்தில் குறைந்த வேகத்தில் செல்லும்போது மின்சாரத்தில் இயங்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரப் பயணங்களில் சுமார் 80 சதவீதத்தை மின்சார முறையில் மேற்கொள்ள முடியும் என ரெனோ கூறுகிறது. இதனால் அடிக்கடி நெரிசலில் சிக்குபவர்களுக்கு பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க வாய்ப்புள்ளது.

Also Read

வெளியில் சார்ஜ் செய்ய வேண்டாம்!

வழக்கமான மின்சார கார்களைப் போன்று இந்த ஹைப்ரிட் காரை வெளிப்புற சார்ஜிங் நிலையத்தில் இணைத்து சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. வாகனம் இயங்கும்போதும் பிரேக் பயன்படுத்தும்போதும் ரீஜெனரேட்டிவ் தொழில்நுட்பம் முறையில் பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சினும் மின்மோட்டார்களும் சூழ்நிலைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவதால், சார்ஜிங் குறித்த கவலை இல்லாமல் இதைப் பயன்படுத்த முடியும்.

இதன் மின் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சினையும் நிர்வகிக்க மல்டி-மோடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் தனியாக டிரைவிங் மோடுகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமின்றி, வாகனத்தின் தேவைக்கு ஏற்ப இந்த அமைப்பு செயல்படும். இருப்பினும், உண்மையான சாலைப் பயன்பாட்டில் கிடைக்கும் மைலேஜ் போக்குவரத்து நெரிசல், ஓட்டும் விதம் மற்றும் சாலை நிலையைப் பொறுத்து மாறுபடும்.

Also Read

மாருதி, டொயோட்டாவுக்குப் போட்டி!

டஸ்ட்டர் ஹைப்ரிட் கார் 29 கிமீ மைலேஜ் தரும் என்று ரெனோ அறிவித்துள்ள நிலையில், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட், மாருதி விக்டோரிஸ் ஹைப்ரிட் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் ஆகிய கார்களுக்குப் புதிய போட்டியை டஸ்ட்டர் உருவாக்கியுள்ளது. மாருதி விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் கார்கள் லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜையும், மாருதி விக்டோரிஸ் 28.65 கிமீ மைலேஜையும் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. இதனைவிட டஸ்ட்டர் ஹைப்ரிட் அதிக மைலேஜ் தரும் வகையில் வர இருக்கிறது.

புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் மாடலுக்கு ரூ.21,000 தொகையில் புக்கிங் நடந்து வருவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரத்தில், 2026ஆம் ஆண்டுக்கான டஸ்ட்டர் ஹைப்ரிட் கார்களின் ஒதுக்கீடுக்கு ஏற்கெனவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காரின் விலை அறிவிக்கப்படாத நிலையில், 29 கிமீ மைலேஜ் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது விலை அறிவிக்கப்பட்ட பிறகே தெளிவாக தெரிய வரும்.

Article Published On: Friday, October 9, 2026, 11:40 [IST]
English summary
Renault duster hybrid 160 hp 29 kmpl mileage india
மேலும்... #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out