160 எச்பி பவர்... விரைவில் அறிமுகமாகும் ரெனால்ட் டஸ்ட்டர் ஹைபிரிட் மாடல்!!

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவியில் முக்கிய மாடலாக இருக்கும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விரைவில் ஹைப்ரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதிக மைலேஜை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த புதிய ஹைப்ரிட் தேர்வு களமிறக்கப்பட உள்ளது.

புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவியை ரெனோ கார் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படும் நிலையில், மிக விரைவில் ஹைபிரிட் மாடலிலும் வர இருக்கிறது.

Renault Duster

பவர்ஃபுல் எஞ்சின்

தற்போது விற்பனையில் இருக்கும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளைவிட புதிய ஹைப்ரிட் மாடலில் கொடுக்கப்படும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் சக்திவாய்ந்த ஹைப்ரிட் மாடலாக வருகிறது. இந்த மாடலில் 1.8 லிட்டர் எஞ்சினுடன் 1.4kWh பேட்டரியுடன் இரண்டு மோட்டார்கள் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலாக வர இருக்கிறது.

இதில் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் கார் சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும். மற்றொரு மோட்டார் ஜெனரேட்டராக செயல்பட்டு ஹைபிரிட் சிஸ்டத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்க உதவுகிறது. இந்த ஹைபிரிட் பவர்டிரெயின் 160 எச்பி பவரையும் 172 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு மல்டி மோடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் சக்கரங்களுக்கு பவர் செலுத்தப்படும்.

Also Read

தினசரி பயன்பாடு

இந்த டஸ்ட்டர் எஸ்யூவியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, அலுவலகம் செல்வது உள்ளிட்ட வழக்கமான நகர்ப்புற பயணங்களில் 80 சதவீதம் வரை எலெக்ட்ரிக் மோடில் காரை இயக்க முடியும். இதனால் குறைவான தூர பயணங்களுக்கு பெட்ரோல் எஞ்சின் பங்களிப்பு அதிகம் தேவைப்படாது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகர சாலைகளில், குறைந்த வேகத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் காரை இயக்குவது எரிபொருள் செலவை குறைக்க உதவும்.

தனியாக சார்ஜிங் தேவையில்லை

முழுமையான EV போல தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் பேட்டரிக்கு தேவையான மின்சாரம் மீண்டும் பெறப்படுகிறது. முந்தைய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவியின் மிகப்பெரிய பலமாக இருந்த டீசல் எஞ்சின் புதிய தலைமுறை மாடலில் இடம்பெறவில்லை. இதற்கு பதிலாக அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் ஹைபிரிட் பவர்டிரெயினை ரெனோ கார் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது.

இதனால் டீசல் டஸ்ட்டர் எஸ்யூவியை விரும்பிய வாடிக்கையாளர்களை ஹைபிரிட் மாடல் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கும். அதே நேரத்தில், அதிக செயல்திறனை விரும்புபவர்களுக்கு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 163 ஹெச்பி பவர் மற்றும் 280 Nm டார்க் திறனை வழங்குகிறது.

Also Read

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அப்போது விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் வெளியிடப்படும். இந்த ஹைப்ரிட் மாடலுக்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் விசாரணைகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வருவதாகவும் ரெனோ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் உள்ளிட்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியை வழங்கும். குறிப்பாக அதிக மைலேஜ், மிடுக்கான தோற்றம் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கான நடைமுறை வசதி ஆகியவற்றை ஒரே காரில் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மாடல் களமிறங்குகிறது.

Article Published On: Tuesday, September 15, 2026, 10:53 [IST]
English summary
Renault duster hybrid 160hp india launch timeline specs
மேலும்... #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out