டஸ்டர் எஸ்யூவியை வாங்குறதுக்கு முன்ன இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் டஸ்டர் எஸ்யூவியை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது ரெனோ. முன்னர் டஸ்டர் விற்பனையில் இருந்த போது இருந்ததை விட தற்போது நிறைய புதிய மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் விற்பனைக்கு வந்து விட்டன. இந்தப் புதிய எஸ்யூவிக்களுடனும் போட்டியிட்டு தன்னுடைய இடத்தை டஸ்டர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியான இந்த சில மாதங்களில் டஸ்டர் கார் குறித்து பல்வேறு விமர்சனங்கள், பாஸிட்டிவ்கள் மற்றும் நெகட்டிவ்களை இணையமெங்கும் பார்த்திருப்பீர்கள். இந்தக் கட்டுரை டஸ்டர் காரின் விமர்சனோ, பாஸிட்டிவ் அல்லது நெகட்டிவோ கிடையாது. இந்த டஸ்டர் காரில் நாம் பார்த்த குறிப்பிட்ட அம்சங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். இந்தக் காரை வாங்கும் முடிவில் இந்த அம்சங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம்.

Renault Duster

முதலில் இன்ஜின். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரில் கொடுத்திருக்கிறது ரெனோ. 162 hp பவர் மற்றும் 280 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை இந்த இன்ஜின் கொண்டிருக்கிறது. இந்த செக்மென்டில் இது பெரிய இன்ஜின் என்று கூற முடியாது. ஏனெனில் போட்டிாளர்களிடம் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்பாட்டில் இருக்கிறது.

ஆனால் நாம் சாலையில் பயணம் செய்யும் போது பவர் போதவில்லையோ எனத் தோன்ற வைக்காமல் போதுமான பன்ச்சை இந்த இன்ஜின் கொடுக்கிறது. பெர்ஃபாமன்ஸும் மிகவும் ஸ்மூத்தாகவே இருக்கிறது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டுமே சிறப்பாகவே இருக்கிறது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டில் ஒரு கியர்பாக்ஸை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Renault Duster Inside

விரைவிலேயே 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் அடங்கிய ஹைபிரிட் பவர்ட்ரெயின் செட்டப்பையும் இந்தக் காரில் கொடுக்கவிருப்பதாக ரெனோ தெரிவித்துள்ளது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அந்த பவர்ட்ரெயின் இன்னும் பவர்ஃபுல்லானதாக தனித்துவமானதாக இருக்கும். நகரங்களில் EV மோடிலேயே அந்த ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட டஸ்டரை பயன்படுத்த முடியும் என ரெனோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சரி அடுத்த விஷயத்திற்கு வருவோம். இந்த மூன்றாம் தலைமுறை டஸ்டரின் ரைடு குவாலிட்டி மிகச் சிறப்பாக இருந்தது. பயணத்தின் எந்த இடத்திலும் சொகுசு குறைவாக இருக்கிறது என்று சொல்லும் நிலை வராத அளவிற்கு இதன் சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் பிற அம்சங்களை வடிவமைத்திருக்கிறது ரெனோ. காரின் ஹேண்டிலிங்கும் சூப்பர். அந்த விஷயத்தில் யோசிக்காமல் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

அடுத்ததாக, சின்னச் சின்ன அம்சங்களையும் இந்தக் காரில் பார்த்துப் பார்த்துக் கொடுத்திருக்கிறது ரெனோ. 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட் செய்யப்பட்ட மற்றும் 6 வே பவர்டு அட்ஜஸ்ட்மென்ட்கள் கொண்ட முன்பக்க சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட வசதிகள் இந்த மிட்-சைஸ் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளன.

போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது இந்த வசதி குறைவாக இருக்கிறதோ என்று நாம் எண்ணி விடாத வகையில் வசதிகளைச் சேர்த்திருக்கிறது ரெனோ. குறிப்பாக டேஷ்போர்டில் இன்ஃபோடெயின்மென்ட் திரை டிரைவரை பார்த்த வகையில் சற்று திருப்பி வைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இது ஒரு சிறிய விஷயம் தான், ஆனால் கார் முழுவதுமாக நமது கண்ட்ரோலில் இருப்பது போன்ற உணர்வை இது டிரைவருக்கு ஏற்படுத்தும்.

அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS அம்சங்கள் ஆகிய பாதுகாப்பு வசதிகளை இந்தக் காரில் கொடுத்திருக்கிறது ரெனோ. இதனால் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இந்த ரெனோ டஸ்டரையும் கூறலாம். கிராஷ் டெஸ்ட் முடிவுகளுடன் பாதுகாப்பான கார் என முத்திரை குத்துவது மட்டும் தான் பாக்கி.

700 லிட்டர் பூட் ஸ்பேஸுடன், மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அதிக பூட் ஸ்பேஸைக் கொண்ட கார்களில் ஒன்றாக இருக்கிறது ரெனோ டஸ்டர். ஆனால் பூட் ஸ்பேஸிற்காக உட்புற இடவசதியைக் குறைத்துவிட்டதோ என்று தோன்றுகிறது. சியரா, கிரெட்டா மற்றும் செல்டோஸுடன் ஒப்பிடும் போது டஸ்டர் இரண்டாம் வரிசை இருக்கையின் இடவசதி சற்று குறைவு தான். போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருக்கலாம் என்பது தான் எங்களது எண்ணம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றையெல்லாம் கடந்து இது ஒரு சிறப்பான கார் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தக் காரில் மிகவும் பிடித்த ஒரு அம்சம் என்றால் இதன் டிசைன் தான். முன்பு விற்பனையில் இருந்த டஸ்டரை நினைவுபடுத்தும் வகையில், சற்று பாக்ஸியா மற்றும் கிளாஸியான டிசைனை புதிய மூன்றாம் தலைமுறை டஸ்டர் கொண்டிருக்கிறது. பார்த்தவுடன் வாங்கத் தோன்றும் வகையில் இதன் டிசைன் இருப்பதை மறுக்க முடியாது.

பாக்ஸியாக கிளாஸியாக இருப்பதனால் சஃப்டாக இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். ஒரு எஸ்யூவிக்கு உண்டான முரட்டுத்தனமான தோற்றத்தையும் இந்தக் கார் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு காராக இந்த டஸ்டர் எஸ்யூவி இருக்கும். குறிப்பாக டிசைனை வைத்துப் பார்க்கும் போது.

இந்த மூன்றாம் தலைமுறை டஸ்டர் எஸ்யூவியை ஐந்து வேரியன்ட்களாக 10.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது ரெனோ. இப்போதே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த மிட்-சைஸ் எஸ்யூவி. வரும் மாதங்களில் இந்தக் கார் நல்ல விற்பனையைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, May 23, 2026, 9:35 [IST]
English summary
Renault duster mid size suv things you should know before buying this car
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+