15.89 லட்சத்தில் கிடைக்கும் புதிய ரெனால்ட் கார்! ஷோருமில் காரை பார்க்கும்போது இந்த விலை கம்மி!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து புதிய தலைமுறை டஸ்டர் (Duster) கடந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய டஸ்டர் காரின் மிட்-வேரியண்ட்டான டெக்னோ (Techno) டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து ஓரளவிற்கு அதிகம் விற்பனையான கார் மாடல்களுள் ஒன்று, டஸ்டர் ஆகும். ரெனால்ட்டின் எஸ்யூவி (SUV) ரக காரான டஸ்டர் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தில் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதென்டிக் (Authentic), எவால்யூஷன் (Evolution), டெக்னோ, டெக்னோ+ மற்றும் ஐகானிக் (Iconic) என்கிற ஐந்து விதமான வேரியண்ட்களில் புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

renault duster mid techno variant

இதில், மிட்-வேரியண்ட்டான டெக்னோ ரெனால்ட்டின் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளது. இதனை உறுதிச்செய்யும் படங்கள் 'வினோத் சைனி' (vinod saini) என்கிற யூடியூப் சேனல் (Youtube Channel) மூலமாக கிடைத்துள்ளன. டஸ்டர் டெக்னோ வேரியண்ட் ஆனது ரூ.15.9 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது ஷோரூமில் காட்சித்தந்து இருக்கும் இந்த குறிப்பிட்ட டெக்னோ வேரியண்ட் பளபளக்கும் கருப்பு நிறத்தில் உள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட டெக்னோ வேரியண்ட் காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் (DCT Gearbox) வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது இல்லாமல் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் டெக்னோ வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது.

renault duster mid techno variant

டஸ்டரின் இந்த டெக்னோ வேரியண்ட்டின் முன்பக்கத்தில் மெல்லியதான டிசைனிலான எல்இடி ஹெட்லேம்ப்கள், டஸ்டர் பெயர் இடம்பெற்ற முன்பக்க க்ரில், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ஃபாக் விளக்குகள் மற்றும் பம்பரில் காற்றுக்கான துளைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. டஸ்டரின் அனைத்து வேரியண்ட்களும் பருத்த கம்பீரமான தோற்றத்தில் கிடைக்கும். இருப்பினும், டஸ்டரின் டாப் வேரியண்ட்களில் கிடைக்கும் சில அம்சங்கள் இந்த மிட்-வேரியண்ட்டில் கிடைக்காது.

அவையாவன, அடாஸ் (ADAS) மற்றும் 360-டிகிரி கேமரா ஆகும். இந்த டஸ்டர் டெக்னோ காரின் பக்கவாட்டிற்கு வந்தால், எஸ்யூவி கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவிலான தோற்றத்தை பார்க்க முடிகிறது. காரின் மேற்கூரையில் கருப்பு நிறத்தில் ரூஃப் ரெயில்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

அலாய் சக்கரங்களின் டிசைன் டஸ்டரின் டாப் வேரியண்ட்களில் இருந்து சற்று மாறுப்பட்டு உள்ளது. இந்த சக்கரங்கள் அளவில் 17 இன்ச்சில், கன்மெட்டல் கிரே நிறத்தில் உள்ளன. சக்கரங்களுக்கு மேலே தடிமனான பிளாஸ்டிக் கிளாடிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கதவுகளின் வெளிப்பக்க கைப்பிடிகள் காரின் உடல் நிறத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்க ஃபெண்டரில் டஸ்டரின் லோகோ இடம்பெற்றுள்ளது.

இந்த டெக்னோ வேரியண்ட் காரின் பின்பக்கத்தில், எல்இடி லைட் பார் மூலமாக எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. பின்பக்க கதவானது எலெக்ட்ரிக் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடியதாக உள்ளது. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி ஆனது 700 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ளது. டஸ்டரின் இந்த மிட் வேரியண்ட்டில் ஸ்பேர் சக்கரம் எதுவும் இல்லை. ஆனால், அவசர கால உதவிக்கு பஞ்சர் கிட் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் டஸ்டர் காரை அடிப்படையான அனைத்து அம்சங்களுடன், சில ஆடம்பர அம்சங்களையும் சேர்த்து வாங்குவதற்கு இந்த டெக்னோ வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். இந்த தொகுப்பில், டஸ்டர் டெக்னோ வேரியண்ட்டின் வெளிப்புற அம்சங்களை மட்டும்தான் பார்த்துள்ளோம். உட்புறத்தில் கிடைக்கும் அம்சங்களை பற்றி இன்னொரு தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 6, 2026, 6:00 [IST]
English summary
Renault duster mid techno variant arrived to dealership showroom check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+