மைலேஜை அள்ளிக் கொடுக்கும் எஸ்யூவி கார்.. இதை வாங்குனா போதும் லைஃப்டைம் செட்டில்மென்ட் தான்!

டஸ்டர் எஸ்யூவியின் மூலம் இந்தியாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது ரெனோ. மிகவும் போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் வெளியாகியிருக்கிறது டஸ்டர். கடந்த மார்ச் மாதம் இந்தக் காரை இந்தியாவில் வெளியிட்டது ரெனோ. தற்போது இந்தக் காரின் மைலேஜ் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

டஸ்டர் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளது ரெனோ. தற்போது வெளியாகியிருப்பது இந்த டர்போ இன்ஜின்களை ARAI அமைப்பு சோதனை செய்த போது கிடைத்த மைலேஜ் அளவுகளே ஆகும்.

Renault Duster

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் எல்லாம் லிட்டருக்கு 18 கிமீ முதல் 21 கிமீ வரையிலான ARAI மைலேஜ் அளவைக் கொண்டிருக்கின்றன. டஸ்டர் எஸ்யூவியின் இரண்டு இன்ஜின்களும் கிட்டத்தட்ட அதே அளவிலான மைலேஜ் அளவுகளையே கொண்டிருக்கின்றன. பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை.

மைலேஜ் குறித்த அளவுகளை தெளிவாகப் பார்ப்பதற்கு முன்னாள், டஸ்டரின் இரண்டு டர்போ இன்ஜின்களின் திறனைக் குறித்து முதலில் பார்த்தவிடலாம். டஸ்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 100 hp பவர் மற்றும் 160 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே ரெனோ கொடுத்திருக்கிறது.

Renault Duster

டஸ்டரில் ரெனோ பயன்படுத்தியிருக்கும் மற்றொரு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 163 hp பவர் மற்றும் 280 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பவர்ஃபுல்லான இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

இந்த இரண்டில் சிறிய இன்ஜின் தான் அதிக மைலேஜைக் கொடுக்கும் ஒன்றாக இருக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது லிட்டருக்கு 19.41 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது மேனுவல் கியர்பாக்ஸுடன் பயன்படுத்தும் போது லிட்டருக்கு 17.75 கிமீ வரையிலான மைலஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பயன்படுத்தும் போது 18.45 கிமீ வரையிலான மைலேஜையும் கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறது.

சிறிய இன்ஜின் கொண்ட டஸ்டர் காரை 10.49 லட்சம் ரூபாய் முதல் 13.49 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் மூன்று வேரியன்ட்களாக நாம் வாங்கலாம். பெரிய இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டஸ்டரை, 12.99 லட்சம் ரூபாய் முதல் 16.99 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டஸ்டரை 14.49 லட்சம் ரூபாய் முதல் 18.49 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது ரெனோ.

இந்தாண்டு முடிவதற்குள்ளாகவே 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைபிரிட் பவர்ட்ரெயினை டஸ்டருக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது ரெனோ. இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட டஸ்டர் எஸ்யூவியானது மேலே குறிப்பிட்ட இன்ஜின்களை விட கூடுதல் மைலேஜைக் கொடுக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து 25 கிமீ வரையிலான மைலேஜைக் கூட நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது விற்பனையில் இருக்கும் டஸ்டர் எஸ்யூவியின் மைலேஜ் அளவுகள் அவ்வளவு மோசமில்லை. சராசரி அளவிலேயே இருக்கின்றன. ஆனால் நிஜ உலகப் பயன்பாட்டில் இதே அளவிலான மைலேஜை நாம் எதிர்பார்க்க முடியாது. லிட்டருக்கு 10 கிமீ முதல 14 கிமீ வரையிலான மைலேஜ் கிடைத்தாலே சிறப்பான விஷயம் தான். விரைவில் சோதனை செய்யப்பட்ட டஸ்டர் மைலேஜ் அளவுகளை இத்தளத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.

Article Published On: Saturday, June 6, 2026, 13:34 [IST]
English summary
Renault duster suv arai mileage figures out how much does this mid size suv give
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out