நாடே எதிர்பார்த்த டஸ்டர் கார் நாளைக்கு வரப்போகுதா? என்னென எதிர்பார்க்கலாம்?
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது பிரபலமான மாடலான டஸ்டர் காரை மீண்டும் களம் இறக்குகிறது. இந்த கார் ஜனவரி 26ம் தேதி விற்பவனைக்காக வருகிறது. இந்த கார் ஒரு மிட் சைஸ் எஸ்யூவி காராக விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் டஸ்டர் காரை கொண்டு வந்து இந்தியாவில் எஸ்யூவி என்ற செக்மெண்டையே பிரபலபடுத்தியது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த காரை மீண்டும் கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் டஸ்டர் காரை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்த கார் ஹூண்டாய் கிரெட்டா, டாடா சியாரா, கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ், டாடா கர்வ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி அஸ்டர், விரைவில் வரவுள்ள நிஸான் டேக்டான் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.
ரெனால்ட் டஸ்டர் காரில் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக முகப்பு பகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கிரில் பகுதியில் ரெனால்ட் பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளுது. சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது 4343 மிமீ நீளம், 2657 மிமீ வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 7 இன்ச் விர்சுவல் டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளுது. இது போக 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் மல்டி மீடியா சிஸ்டம், இது போக வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டைப் சி சார்ஜிங் போர்ட், 360 டிகிரி கேமரா அடாஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக 3 சிலிண்டர் 1.2 லிட்டர் டிசிஇ இன்ஜின் ஒரு ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. இது 100 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது போக மைல்டு ஹைபிரிட் வெர்ஷன் 1.2 டிசிஇ இன்ஃஜினாக டர்போ ஆப்ஷனில் 3 சிலிண்டர் இன்ஜின் உடன் வழங்கப்பட்டுள்ளது. 130 எச்பி பவரை வெளிப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டுள்ளுது. இதுபோக 48 வோல்ட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர், ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டஸ்டர் கார் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் நல்ல வளர்ச்சியையும் போட்டியையும் உருவாக்கும். நாடே எதிர்பார்க்கும் இந்த கார் பற்றிய உங்கள் கருத்து என்ன?


Click it and Unblock the Notifications









