பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வரும் டஸ்டர் தான் ரெனால்ட்டை காப்பாற்றனும்! ஒரு சமயத்தில் எப்படி இருந்த கம்பெனி!
ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய டஸ்டர் (Duster) கார் இன்று (மார்ச் 17) அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகளவில் விற்பனையான மிகவும் சில ரெனால்ட் கார்களுள் டஸ்டரும் ஒன்று என்பதால், அதன் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சனின் அறிமுகம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் ரெனால்ட் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்திய கார்கள் சந்தையில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் ரெனால்ட்டில் இருந்து தற்போதைக்கு மூன்றே மூன்று கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

அவையாவன, டிரைபர் (Triber), கைகர் (Kiger), க்விட் (Kwid) ஆகும். இவை மூன்றும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 3,495 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே பிப்ரவரி மாதத்தில் வெறும் 2,676 கார்களை மட்டுமே ரெனால்ட் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ரெனால்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 30.61% அதிகரித்துள்ளது.
ஆனால், 2026 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் ரெனால்ட் கார்களின் விற்பனை ஆனது 5.92% குறைந்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 3,715 கார்களை இந்தியாவில் ரெனால்ட் விற்பனை செய்திருந்தது. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் கார் மாடல், டிரைபர் என்கிற எம்பிவி (MPV) ரக கார் ஆகும்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 3,495 ரெனால்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதில் சுமார் 2,419 யூனிட்கள் விற்பனையை வழங்கியது டிரைபர் ஆகும். அதாவது, தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் கார்களுள் 75% கார்கள், டிரைபர் கார்கள் ஆகும். 2025 பிப்ரவரியில் வெறும் 1,545 டிரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இருப்பினும், 2026 ஜனவரியில் டிரைபர் கார்களின் விற்பனை எண்ணிக்கை 2,500 யூனிட்களை கடந்திருந்தது. டிரைபருக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான ரெனால்ட் கார் மாடல், கைகர் ஆகும். 2025 பிப்ரவரியில் 433 கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 701 கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் குறைவாக விற்பனையாகும் ரெனால்ட் காராக விளங்கும் க்விட் என்கிற அளவில் சிறியதான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் கடந்த மாதத்தில் 375 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2025 பிப்ரவரியில் 698 க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2026 ஜனவரியிலும் க்விட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 500ஐ கடந்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைபர் காரை தவிர்த்து இந்தியாவில் ரெனால்ட் கார்களின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆதலால், ரெனால்ட் நிறுவனத்தை பொறுத்தவரையில் புதிய டஸ்டர் எஸ்யூவி காரின் அறிமுகம் மிகவும் தேவையானது ஆகும். புத்துணர்ச்சியான தோற்றத்தில் டஸ்டரின் மறுவருகை இந்தியாவில் ரெனால்ட் கார்களின் விற்பனையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








