5 பேர் போகக்கூடிய புதிய ரெனால்ட் காரை இன்னும் அழகாக பெற செம்ம ஐடியா! வாங்கும்போதே கேட்டு வாங்கனும்!

ரெனால்ட் (Renault) நிறுவனம், அதன் கார் உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கார்களைத் தனிப்பயனாக்கம் (Customisation) செய்து மேலும் அழகாக்கி கொள்ள பல்வேறு ஆக்சஸரீஸ்களை (Accessories) வழங்கி வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2026 ரெனால்ட் டஸ்டர் (Duster) காரும் இதற்கு விதிவிலக்கல்ல.

சென்னையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்தியாவிற்கான 2026 ரெனால்ட் டஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதல் தலைமுறை டஸ்டருக்குப் பிறகு ரெனால்ட்டின் மிக லட்சியமான திட்டமாகும். அதிக எதிர்பார்ப்புக்குள்ளான இந்த எஸ்யூவி, தற்போது இந்தியாவின் போட்டி மிகுந்த 4.2மீ முதல் 4.4மீ வரையிலான எஸ்யூவி கார்கள் பிரிவில் 14வது கார் மாடலாக களமிறங்கியுள்ளது.

2026 renault duster suv car accessories

இந்த பிரிவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த, வெறும் ஸ்டாக் வாகனம் மட்டும் போதாது. புதிய டஸ்டர் காரும் அதன் அன்றாட செயல்பாடு, திறன், தோற்றம் மற்றும் தனித்துவத்தை மேம்படுத்தும் பலவிதமான ஆக்சஸரீஸைப் பெற்றுள்ளது. ரெனால்ட் நிறுவனம் டஸ்டரின் வெளிப்புற அழகை மேம்படுத்தும் வகையில் பல ஆக்சஸரீஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் பொனெட் பாதுகாப்பான், விளக்குகளுக்கான கார்னிஷ், காற்று உட்செல்லும் பகுதி மற்றும் கதவு ஸ்கட்டில் கார்னிஷ், அலாய் சக்கரங்களுக்கான இன்சர்ட், பாடி சைட் கிளாடிங் இன்சர்ட், டெக்கால் கேமோ, சாலையில் இருந்து தெறிக்கும் மண்ணை தடுக்கும் தடுப்புகள் மற்றும் சைடு ஸ்டெப்கள் ஆகியவை அடங்கும். இந்த ஆக்சஸரீஸ் காரின் சாகச குணாதியசத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.

2026 renault duster suv car accessories

ஆக்சஸரீஸ்களில் மிகவும் சிறப்பானது ரூஃப் பாக்ஸ் ஆகும். இது கூடுதல் ஸ்டோரேஜ் இட வசதியை அளிக்கிறது. டஸ்டர், 700 லிட்டர் பூட் இடவசதியுடன், அதன் பிரிவிலேயே மிகப்பெரிய பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. இந்த ரூஃப் பாக்ஸ் ஆனது பூட்டும் வசதியுடன், உறுதியான ரேக்கின் மீது பாதுகாப்பாகப் பொருத்தப்படுகிறது.

சைடு ஸ்டெப்கள் காரில் எளிதாக ஏறி இறங்க உதவுவது மட்டுமின்றி, ரூஃப் பாக்ஸை அணுகவும் உதவுகின்றன. சென்னையில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்சஸரீஸ் பொருத்தப்பட்ட டஸ்டர் காரில், ஸ்டாக் மாடலை விட வித்தியாசமான சக்கரங்கள் மற்றும் டயர்கள் இடம்பெற்றிருந்தன. 17 இன்ச் அலாய் சக்கரங்கள், அகலமான 235-பிரிவு மேக்சிஸ் A/T டயர்களுடன் வழங்கப்படுகின்றன.

2026 renault duster suv car accessories

அதுவே, ஸ்டாக் டஸ்டர் 225-பிரிவு டயர்களுடன் வருகிறது. உட்புறத்தில், டஸ்டர் நடைமுறைக்குரிய பல கூடுதல்களைப் பெற்றுள்ளது. இதில், அச்சிடப்பட்ட தரைக் கம்பளங்கள், பூட் லைனர், அனைத்து ஜன்னல்களுக்கான சன் பிளைண்ட்கள் மற்றும் உயர்த்தப்பட்ட லக்கேஜ் போர்டு ஆகியவை அடங்கும். காருக்கு உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் உதவும் பக்கவாட்டு ஃபுட்போர்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய 2026 ரெனால்ட் டஸ்டருக்கான முன்பதிவுகள் நேற்று ரூ.21,000க்கு தொடங்கப்பட்டன. முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரியில் முன்னுரிமை அளிக்கப்படுவது மட்டுமின்றி, கவர்ச்சிகரமான அறிமுக விலை சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகைகள் பின்னர் அறிவிக்கப்படும். ஹைப்ரிட் அல்லாத டஸ்டர் கார் வேரியண்ட்களின் டெலிவரி 2026 மார்ச்சில் தொடங்கும், அதே சமயம் ஹைப்ரிட் வேரியண்ட்களின் டெலிவரிகள் 2026 தீபாவளியை ஒட்டி கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக்சஸரீஸ்கள், ஏற்கனவே நம்பிக்கைக்குரிய டஸ்டரை மேலும் தனிப்பயனாக்கக்கூடியதாகவும், திறனாற்றல் மிக்கதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் மாற்றுகின்றன. இவை காரின் தோற்றத்தை மட்டுமல்லாமல், கரடுமுரடான சவாலான சாலைகளில் இயங்கும் திறனையும் அதிகரிக்கின்றன. நீங்கள் விரும்பும் ஆக்சஸரீஸ் பொருத்தப்பட்ட டஸ்டர் கார் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும் என்பதை டீலர்ஷிப் ஷோரூம் மற்றும் ஆன்லைனில் விர்டியூவலாக பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 27, 2026, 21:17 [IST]
English summary
Renault introduces accessories of 2026 duster suv car roof box bonnet protector
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X