5 பேர் போகும் கார் இவ்வளவு கம்மியான விலையில் கிடைப்பது பெரிய விஷயம்! ஆனாலும் கஸ்டமர்ஸ் வர மாட்றாங்க!
ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் 4 கார் மாடல்களுள் கைகர் ஒன்றாகும். 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட, விலை குறைவான SUV வகையைச் சேர்ந்த காராக ரெனால்ட் கைகர் விளங்குகிறது. விற்பனையில் டாடா பன்ச், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ உள்ளிட்ட பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்கும் கைகர் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட் இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. இதற்குபின் இந்திய கார் மார்க்கெட்டிற்கு வந்த கியா, MG உள்ளிட்ட கார் நிறுவனங்கள் ரெனால்ட்டை முந்திக் கொண்டு செல்கின்றன. இந்தியாவில் ரெனால்ட் மிகவும் நம்பும் அதன் கார்களுள் கைகர் ஒன்றாகும்.

ரெனால்ட்டின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரான கைகர் கடந்த மே மாதத்தில் மொத்தம் 656 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனையான ரெனால்ட் கார்கள் லிஸ்ட்டில் 4இல் 3வது இடத்தை கைகர் பிடித்துள்ளது. இதனை காட்டிலும் குறைவாக, கடந்த மாதத்தில் வெறும் 300 யூனிட் ரெனால்ட் கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கைகர் கார்கள் உள்பட கடந்த மே மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 113 கார்களை ரெனால்ட் விற்பனை செய்துள்ளது. கடந்த மாதத்தில் வெறும் 656 கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருப்பது குறைவாக தெரிந்தாலும், கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தை காட்டிலும் 19% அதிகரித்துள்ளது.

ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 551 கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 727 கைகர் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் 9.8%, அதாவது 71 கைகர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் என இரு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கைகர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டில் 60% வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் 1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினையே தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்.எம் டார்க் திறனையும், 1 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎஸ் மற்றும் 160 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டையும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்கலாம்.
மற்றப்படி, டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் கைகர் காரில் வழங்கப்படுவது இல்லை. CMF-A+ பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் ரெனால்ட் கைகர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.81 லட்சத்தில் இருந்து ரூ.10.34 லட்சம் வரையில் உள்ளன. ரெனால்ட் கைகர் கடைசியாக கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் அப்கிரேட் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் கைகர் குறைவான விலையில் கிடைக்கும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி காராக இருப்பினும், இதன் விற்பனை தொடர்ந்து குறைவாகவே பதிவாகி வருகிறது. சில மாதங்களில் 700, 800 கைகர் கார்கள் விற்பனையாகினாலும், அந்த மாதங்களில் கைகரின் போட்டி கார்கள் அதனை காட்டிலும் பல மடங்கு வளர்ச்சியை பதிவு செய்கின்றன. இதுதான் தற்போதைக்கு தொடர்கதையாகி வருகிறது.


Click it and Unblock the Notifications