மிகவும் குறைவான விலையில் எஸ்யூவி ரக கார்... அதுக்குனு இவ்ளோ கம்மியா... மார்க்கெட்டை மிரள விட்ட ரெனால்ட்...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர் (Renault Kiger). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 1,184 ரெனால்ட் கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 762 ரெனால்ட் கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 422 ரெனால்ட் கைகர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 55.38 சதவீத வளர்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் ரெனால்ட் கைகர் கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 701 ரெனால்ட் கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் அதன் பின் வந்த மார்ச் மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 1,184 ரெனால்ட் கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்த வகையில் பார்த்தால் 483 ரெனால்ட் கைகர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 68.90 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் கைகர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.81 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை ரெனால்ட் கைகர் பெறுகிறது.
அதே நேரத்திவ் ரெனால்ட் கைகர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 10.34 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட ரெனால்ட் கைகர் காரில் 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) மற்றும் கியா சொனெட் (Kia Sonet) போன்ற கார்களுக்கு எல்லாம் ரெனால்ட் கைகர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








