ரெனால்ட் கார் இதைவிட குறைவான விலையில் இல்லை! சென்னையில் வாங்கினால் ஆன்-ரோடு விலை எவ்வளவு?

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் நான்கு கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள், விலை குறைவான ஹேட்ச்பேக் கார் மாடல் ரெனால்ட் க்விட் ஆகும். SUV கார்களை போன்று நிமிர்ந்த உடலமைப்பை கொண்டிருப்பினும், உண்மையில் இது ஒரு ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த காராகும்.

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நான்கு கார் மாடல்களிலேயே மிகவும் விலை குறைவானது, க்விட் ஆகும். ரெனால்ட் க்விட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வெறும் ரூ.4.30 லட்சத்தில் இருந்து ரூ.5.99 லட்சம் வரையில் உள்ளன. ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிர ரூபாய்கள் மட்டுமே அதிகமாக வரும்.

renault kwid chennai on-road prices

அப்படியென்றால், இந்த காரை எளிதாக வாங்கிவிடலாமே என விரும்புபவர்களுக்காக சென்னையில் ரெனால்ட் க்விட்டின் ஆன்-ரோடு விலைகள் குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதற்காக சென்னையில் செயல்படும் 'குன் ரெனால்ட்' டீலர்ஷிப் ஷோரூமை நாங்கள் தொடர்புக் கொண்டு விசாரித்தோம். அதன்படி, க்விட்டின் சென்னை ஆன்-ரோடு விலைகள் வேரியண்ட்டாக...

அதென்டிக் (Authentic)
ரெனால்ட் க்விட் காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான இது மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. மேலே கூறப்பட்ட ரூ.4.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது இதன் உடையதே ஆகும். ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி, ஷோரூம் ஹேண்ட்லிங் கட்டணம் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் சென்னை ஆன்-ரோடு விலை தற்சமயம் ரூ.5,16,456 ஆக உள்ளது.

renault kwid chennai on-road prices

எவால்யூஷன் (Evolution)
க்விட் காரை AMT கியர்பாக்ஸ் உடன் குறைந்த விலையில் இந்த வேரியண்ட்டில் வாங்கலாம். அதேநேரம், மேனுவல் ஆப்ஷனிலும் இந்த வேரியண்ட் கிடைக்கிறது. எவால்யூஷன் மேனுவல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.67 லட்சம் மற்றும் ஆட்டோமேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.67 லட்சமாக உள்ள நிலையில், இவற்றின் சென்னை ஆன்-ரோடு விலைகள் தற்சமயம் முறையே ரூ.5,58,731 மற்றும் ரூ.5,97,310 ஆகும்.

டெக்னோ (Techno)
ரெனால்ட் க்விட் காரின் மிட் வேரியண்ட்டான இதுவும் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5 லட்சம் மற்றும் ரூ.5.49 லட்சமாக உள்ள நிலையில், ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து சென்னை ஆன்-ரோடு விலைகள் முறையே ரூ.5,97,310 மற்றும் ரூ.6,59,280 ஆக தற்சமயம் உள்ளன.

Variant Ex-Showroom Price (₹) Comp. Insurance (+3Yr 3rd Party) (₹) Reg. + Life Tax + Fees (₹) Chennai On-Road Price (₹)
Authentic MT 429,900 26,068 60,488 516,456
Evolution MT 466,500 27,351 64,880 558,731
Evolution AMT 499,900 28,522 68,888 597,310
Techno MT 499,900 28,522 68,888 597,310
Techno AMT 548,800 30,236 80,244 659,280
Climber MT 547,000 30,173 80,010 657,183
Climber AMT 588,200 31,617 85,366 705,183
Climber MT DT 558,000 30,559 81,440 669,999
Climber AMT DT 599,100 31,999 86,783 717,882

க்ளிம்பர் (Climber)
ரெனால்ட் க்விட் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக விளங்கும் இது மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதேபோல், இதனை சிங்கிள்-டோன் அல்லது ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் வாங்கலாம். க்விட் காரை ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் க்ளிம்பர் வேரியண்ட்டில் மட்டுமே வாங்க முடியும்.

சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் க்ளிம்பர் மேனுவல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.47 லட்சத்தில் இருந்து ரூ.5.99 லட்சம் வரையில் உள்ள நிலையில், சென்னை ஆன்-ரோடு விலைகள் தற்சமயம் ரூ.6,57,183இல் இருந்து ரூ.7,17,882 வரையில் உள்ளன. ஆக்சஸரீஸ், கூடுதலாக உத்தரவாதம், ரெனால்ட் ஈசி கேர் மற்றும் செராமிக் கோட்டிங் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து வாங்கினாலும், ரூ.7,69,937 என்கிற ஆன்-ரோடு விலையில் இந்த பைக்கை வாங்கி விடலாம்.

Variant Basic Accessories Zero Dep. Insurance Add-on Extended Warranty Renault Easy Care Ceramic Coating Max On-Road Price (All Optional)
Authentic MT 11,474 3,373 7,392 14,041 13,262 565,999
Evolution MT 11,474 3,661 7,392 14,041 13,262 608,561
Evolution AMT 11,474 3,923 7,705 14,912 13,262 648,586
Techno MT 11,474 3,923 7,392 14,041 13,262 647,402
Techno AMT 11,474 4,306 7,705 14,912 13,262 710,940
Climber MT 11,474 4,292 7,392 14,041 13,262 707,644
Climber AMT 11,474 4,616 7,705 14,912 13,262 757,152
Climber MT DT 11,474 4,379 7,392 14,041 13,262 720,546
Climber AMT DT 11,474 4,701 7,705 14,912 13,262 769,937

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூடுதலாக அனைத்து விதமான அம்சங்களையும் சேர்த்தாலும், ரூ.7.70 லட்சத்திற்குள் ரெனால்ட் க்விட் காரை வாங்கிவிடலாம் என்பது சிறப்பான அம்சமாகும். எந்த கூடுதல் அம்சமும் இல்லாமல் இந்த காரின் எண்ட்ரி-லெவல் அதெண்டிக் வேரியண்ட்டை ரூ.5.16 லட்சம் என்கிற ஆன்-ரோடு விலையில் தற்சமயம் சென்னையில் வாங்கிவிடலாம். இந்தியாவில் இவ்வளவு குறைவான ஆன்-ரோடு விலையில் கிடைக்கும் மிகவும் சில கார்களுள் க்விட் ஒன்றாகும்.

Article Corrections

விரிவான விலைகள் குறித்த விபரங்கள் அடங்கிய அட்டவணைகள் புதியதாக சேர்க்கப்பட்டன.
Article Published On: Friday, June 19, 2026, 23:59 [IST]
English summary
Renault kwid chennai on road prices june 2026 include rto charges insurance and road tax
மேலும்... #renault #kwid #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out