பெரிய எஸ்யூவி போல மாறிய புதிய ரெனோ க்விட் கார்... பிரேசிலை தொடர்ந்து இந்தியாவிலும் வருமா?

பட்ஜெட் கார் வாங்குபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருக்கும் ரெனோ க்விட் கார் பல்வேறு மாற்றங்களுடன் தற்போது பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2027 மாடலாக வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய க்விட் கார் வெளிப்புற தோற்றத்தில் மட்டுமல்லாமல், கேபினிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவிலும் இந்த புதிய ரெனோ க்விட் கார் விரைவில் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய க்விட் கார் எவோலியூசன், டெக்னோ மற்றும் அவுட்சைடர் என மூன்று வேரியண்ட்களில் களமிறக்கப்பட்டு இருக்கிறது. முன்பக்கத்தில் ரெனோ நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு தத்துவத்துக்கு ஏற்ப க்ரில் மற்றும் பம்பர் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கருப்பு நிற கிரில், மெல்லிய எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை காருக்கு முன்பைவிட முரட்டுத்தனமான எஸ்யூவி போன்ற தோற்றத்தை கொடுக்கின்றன.

Renault Kwid

இந்த காரில் 14 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சமாக கூறலாம். பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், டெயில் லைட் மற்றும் பம்பரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

Also Read

புதிய க்விட் காரின் கேபினில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இப்போது 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.1 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியும் உள்ளது. இரண்டு USB-C போர்ட்டுகள், புதிய ஸ்டீயரிங் வீல், எலக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் ரியர் வியூ மிரர்கள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பிரேசில் நாட்டில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, எத்தனால் உள்ளிட்டவற்றுடன் கலப்பு செய்த பெட்ரோலிலும் இயங்கும் இணக்கத்தன்மை உடையது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே அங்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது க்விட் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் விற்பனையில் உள்ளது.

Also Read

ஏற்கனவே க்விச் கார் இந்தியாவில் 2026 மாடலாக அப்டேட் செய்யப்பட்டு, புதிய முப்பரிமாண லோகோ, ஸ்டீயரிங் வீல் மற்றும் 8 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளிட்ட மாற்றங்களை பெற்றுள்ளது. ரூ.4.53 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

எனினும், இந்தியாவிலும் டிசைன் மாற்றங்களுடன் க்விட் கார் விற்பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதில் வழங்கப்படும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இந்திய மாடலிலும் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிப்பதாகவே தோன்றுகிறது.

Article Published On: Monday, August 31, 2026, 14:30 [IST]
English summary
Renault kwid facelift brazil india launch 2026 new features
மேலும்... #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out