டாடா டியாகோவுக்குப் போட்டியா வெறும் நாலரை லட்சம் ரூபாய்க்கு புதிய கார் வெளியாகுது!

இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் காராக இருக்கிறது ரெனோ க்விட் (Renault Kwid). இந்தக் காரைப் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம். நாளை (ஜூன் 3) புதிய ஃபேஸ்லிப்ட் காரை வெளியிடுகிறது அந்நிறுவனம். இந்தப் புதிய காரில் என்னென்ன மாற்றங்களை எல்லாம் அந்நிறுவனம் செய்யலாம் என்பதையும், என்ன விலையில் புதிய கார் வெளியாகலாம் என்பதையும் இங்கே நாம் பார்க்கலாம்.

5 லட்சம் ரூபாய்க்குள்ளான காராகவே க்விட் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷனும் 5 லட்சம் ரூபாய்க்கு உள்ளாகவே இருக்கும். குறிப்பாக 4.50 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது இருப்பதை விட பார்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான காராக புதிய காரை ரெனோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dacia Spring

தற்போது ஒவ்வொரு மாதமும் 1,000 யூனிட்டுகளுக்கு உள்ளாகவே ரெனோ க்விட் விற்பனையாகி வருகிறது. ஆனால் எப்போதும் இதன் விற்பனையை இப்படி இருந்தது இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்தால் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒரு காராக க்விட் இருந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 10,000 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருந்திருக்கிறது. அப்போது மாருதி ஆல்டோ K10 காரும் சிறப்பாக விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது

இப்போது ஆல்டோ K10 மற்றும் க்விட் ஆகிய இரண்டு கார்களின் விற்பனையுமே வெகுவாகக் குறைந்துவிட்டது. இரண்டுமே மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறிய ரக கார்களாகவே இருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் வாடிக்கையாளர்களின் விருப்பம் மாறியதே இந்தக் கார்களின் விற்பனை குறைந்ததற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

dacia Spring

இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மாடர்னான அம்சங்கள் மற்றும் டிசைனுடன் க்விட் ஃபேஸ்லிப்ட் காரை ரெனோ வடிவைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசதிகளிலும், சற்று ப்ரீமியமான ஒன்றாகவே புதிய க்விட் ஹேட்ச்பேக் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது.

மெக்கானிக்கலாக தற்போது இருப்பதை விட இன்னும் பவர்ஃபுல்லான இன்ஜினைக் கொடுத்தால், அதற்கேற்ற வகையில் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும். எனவே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸைப் பொறுத்தவரை தற்போதைய காரில் இருக்கும் அம்சங்களே புதிய க்விட் ஃபேஸ்லிப்ட் காரிலும் பயன்படுத்தப்படும். தற்போது க்விட் காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இன்ஜினானது 67 hp பவர் மற்றும் 91 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்து வருகிறது ரெனோ. தற்போது இந்த ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே க்விட் ஹேட்ச்பேக்கில் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய காரிலும் இந்த இன்ஜின் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி, புதிய க்விட் காரின் வெளிப்புற வடிவமைப்பு ஐரோப்பாவில் ரெனோவின் துணை நிறுவனமான டாசியா ஸ்பிரிங் எலெக்ட்ரிக் காரினை ஒற்றதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்பிரிங் எலெக்ட்ரிக் கார் வேறெதுவும் இல்லை, க்விட்டின் எலெக்ட்ரிக் வடிவம் தான். அந்த டிசைனை அப்படியே க்விட் ஃபேஸ்லிப்டிற்கு ரெனோ கொண்டு வரவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ரெனோ என்ன செய்திருக்கிறது என்பது நாளை (ஜூன் 3) தெரிந்துவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அப்டேட்டோடு காரின் விலையையும் ரெனோ கட்டுக்குள் வைத்தால் க்விட்டிடம் இருந்து மீண்டும் ஒரு கம்பேக்கை எதிர்பார்க்கலாம். மேலும், குறைவான விலையாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் அளவிலான வசதிகளையும் கொடுத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் புதிய க்விட் ஹேட்ச்பேக் பூர்த்தி செய்யுமா.

Article Published On: Thursday, July 2, 2026, 16:53 [IST]
English summary
Renault kwid facelift to launch tomorrow what to expect from this new low price car
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out