ஒரு காலத்தில் இந்தியாவையே மிரள விட்ட கார்! பைக் விலையில் விற்பனை செய்யப்படும் பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு!
இந்திய சந்தையில் சமீப காலமாக மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Entry Level Hatchback Cars) 'டிமாண்ட்' இல்லை. வாடிக்கையாளர்களின் கவனம் அப்படியே முழுக்க முழுக்க எஸ்யூவி கார்களின் (SUV Cars) பக்கம் திரும்பி விட்டது.
கடந்த 2025ம் ஆண்டில் கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி (GST) குறைக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட, ஒரு சில ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனையில் எழுச்சி ஏற்படவில்லை. சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) காரும் ஒன்றாகும்.

ரெனால்ட் க்விட் கார் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, எஸ்யூவி கார்களை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதாவது இது பார்ப்பதற்கு சிறிய எஸ்யூவி ரக கார் போலவே இருக்கும். இதன் காரணமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ரெனால்ட் க்விட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
இதன் காரணமாக சுமார் 6 ஆண்டுகளிலேயே, அதாவது 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ரெனால்ட் க்விட் கடந்தது. ஆனால் சமீப காலமாக ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

ரெனால்ட் க்விட் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 369 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய நவம்பர் மாதம் 447 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த டிசம்பர் மாதத்தில், 78 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 17.45 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ரெனால்ட் க்விட் கார், இதை விட கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 628 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 369 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 259 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 41.24 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் காரணமாக ஒரு காலத்தில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ரெனால்ட் நிறுவனத்தின் காராக இருந்த க்விட் தற்போது மிகவும் மோசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் ரெனால்ட் காராக மாறியுள்ளது. இது போன்ற மிக கடுமையான சரிவுகளில் இருந்து ரெனால்ட் க்விட் மீண்டு வந்து, வரும் மாதங்களில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யுமா? என்பது சந்தேகமே.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இது ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் க்விட் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
பிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு வேளை அது நடக்கும்பட்சத்தில், ரெனால்ட் க்விட் காரின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








