வெறும் 4.30 லட்சத்துக்கு பிரான்ஸ் நிறுவனத்தின் கார்! ஹேட்ச்பேக்கா இருந்தாலும் எஸ்யூவி மாதிரி இருக்கு!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). எஸ்யூவி கார்களை போன்ற தோற்றம் கொண்ட இந்த ஹேட்ச்பேக் காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), வி3 கார்ஸ் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், 503 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய மாதம், அதாவது 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம், வெறும் 369 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஜனவரி மாதத்தில், 134 ரெனால்ட் க்விட் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் க்விட் கார் விற்பனையில் 26.64 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 5.99 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்கள் உடன், ரெனால்ட் க்விட் போட்டியிட்டு வருகிறது.
இதில், டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை 4.57 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய கார்களின் ஆரம்ப விலைகள் முறையே 3.70 லட்ச ரூபாய் மற்றும் 3.50 லட்ச ரூபாயாக இருக்கின்றன. இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் க்விட் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 16 பாதுகாப்பு வசதிகளை (Safety Features) வழங்குகிறது.
இதில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அஸிஸ்ட் உடன் இபிடி, ஏபிஎஸ், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.


Click it and Unblock the Notifications








