மாருதிக்கு செக்! ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த காரை அப்டேட் செய்யும் முன்னணி நிறுவனம்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் ஒரு மாதத்திற்கு சராசரியாக சுமார் 10 ஆயிரம் ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையாகி கொண்டிருந்தன. ஆனால் தற்போது அதன் நிலைமை பரிதாபகரமாக உள்ளது.

5 இலக்கத்தில் இருந்த ரெனால்ட் க்விட் காரின் விற்பனை எண்ணிக்கை தற்போது 3 இலக்கமாக சுருங்கியுள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வெறும் 300 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Renault Kwid Side View

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 540 க்விட் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கைதான். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறி கொண்டிருப்பதை இந்த எண்கள் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன.

கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்தில் 240 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 44.44 சதவீத வீழ்ச்சி ஆகும். அதாவது ரெனால்ட் க்விட் காரின் விற்பனை கிட்டத்தட்ட அப்படியே பாதியாக குறைந்துள்ளது.

Renault Kwid

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், ரெனால்ட் க்விட் கார் சறுக்கலையே சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 410 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அது அதன் பின் வந்த மே மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 300 ஆக குறைந்துள்ளது.

அதாவது இந்த வகையில் பார்த்தால் 110 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 26.83 சதவீத வீழ்ச்சி ஆகும். ரெனால்ட் க்விட் இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இருப்பினும் இந்தியாவில் தற்போது விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களுக்கான 'டிமாண்ட்' நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி புயலில் சிக்கிதான் ரெனால்ட் க்விட் சின்னாபின்னமாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் க்விட் மட்டுமல்லாது, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) போன்ற மற்ற ஒரு சில ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை வீழச்ச்சியடைந்திருப்பதற்கும் இந்த எஸ்யூவி புயல்தான் காரணம். இருப்பினும் வரும் மாதங்களில் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஏனெனில் ரெனால்ட் நிறுவனம் க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை வரும் ஜூலை 3ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டிசைன் மற்றும் வசதிகள் போன்ற பல்வேறு அம்சங்களில் பல்வேறு அப்டேட்களுடன் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 4.50 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

ரெனால்ட் க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

Article Published On: Sunday, June 28, 2026, 21:06 [IST]
English summary
Renault kwid sales report may 2026 44 per cent down
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out