ரஃபேல் கார் இந்தியாவிற்கு வருதா? புதியதாக வந்த வீடியோவால் பரபரப்பு!
இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் ரபேல் என்ற புதிய காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இந்த காருக்கான சோதனையை தற்போது இந்தியாவில் அந்நிறுவனம் செய்து வருகிறது. இந்திய சாலைகளில் அந்த கார்களை தற்போது காண முடிகிறது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கூபே ரக எஸ்யூவி காராக ரபேல் என்ற காரை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் இந்த காரை தற்போது இந்தியா சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆட்டோ மேக்கர் பொன்சம் சார்லஸ் என்ற பெயரில் இந்த காரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இது குறித்து நாம் விசாரித்த போது இந்த காரை ரெனால்ட் நிறுவனத்தின் பணியாற்றும் அதிகாரி ஒருவர் பயன்படுத்திய காராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் இந்த காரை இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என்ற தகவல் தான் தற்போது வரை வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் ரெனால்ட் நிறுவனம் இது ரஃபேல் என்ற காரை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த காரின் பெயருக்கு ஏற்ப இந்த காரின் வடிவமைப்பும் விமானத்தில் உள்ள பல்வேறு வடிவமைப்பை இன்ஸ்பயர் செய்து வரும் இந்திய போர் விமானத்தின் பெயர் இந்த காருக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அட்வான்ஸ் ஆன ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காராகும் இந்த காரை சிஎம்எப் சி டி என்ற பிளாட்பார்மில் தயாரித்து உள்ளார்கள். இது அந்நிறுவனத்தின் அஸ்ட்ரால் மற்றும் எஸ்ஸ்பேஸ் என்ற கார்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராகும். இந்த காரின் பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய கார்கள் இதே வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட கார்களாக விற்பனையாகி வருகிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்த காரை ஒரு டீசர்ட்மென்ட் எஸ் யூ வி காராக உருவாக்கியுள்ளது இந்த காரின் நீளத்தை பொருத்தவரை 4.71 மீட்டர் நீளமும் 2.74 மீட்டர் வீல் பேஸூம் கொண்ட காராக உருவாக்கியுள்ளது. இந்த காரில் எல்இடி டி ஆர் எல் மற்றும் ஸ்லிம்மான எல்இடி ஹெட் லைட் வழங்கப்பட்டுள்ளன. ரெனால்ட் டைமண்ட் லோகோவை இன்ஸ்பயர் செய்த கிரில் பேட்டர்ன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 17 டிகிரி சாய்வான ரூப் லைன் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கான வழங்குகிறது. பின்பக்கம் கனெக்டெட் எல்இடி டெய்ல் லைட் செய்யப்பட்ட ஸ்பாய்லர்கள் கிளீனான பம்பர் வடிவமைப்பு ஆகிய இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உள்ளே ஓபன் ஆர் டிஜிட்டல் காக்பிட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 12.3 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் 12 இன்ச் கொண்ட இன்ஃபோடைமென்ட் டச் ஸ்கிரீன் சிஸ்டம் உள்ளது. இதுபோக ஆப்ஷனலாக ஹெட்செட் டிஸ்ப்ளே ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பகுதி பிரீமியமாகவும் அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாகவும் வழங்கப்பட்டுள்ளது. நல்ல தரமான மெட்டீரியல் கொண்டு உட்புற வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது அம்பியன்ஸ் லைட்டிங் வசதி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் உள்ளே முக்கியமாக பானரோமிக் கிளாஸ் ரூம் வழங்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிகலி டார்க் செய்யப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது இதுபோக ஆம்பியன்ஸ் லைட் பின்பக்க சீட் வசதி 647 லிட்டர் பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 200 பி எஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. இது போக பிளக்கின் ஹைபிரிட் வேரியண்டில் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. இது 296 பி எஸ் பவரைவுபடுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரீமியம் கோப்பையை உருவாக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications








