டஸ்டர் எஸ்யூவியில் குறைவான விலையிலேயே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொடுக்கும் ரெனோ

ரெனோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் புதிய மூன்றாம் தலைமுறை டஸ்டர் எஸ்யூவியின் விற்பனையைத் தொடங்கியது. மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ் மற்றும் மாருதி கிராண்டு விட்டாரா ஆகிய கார்கள் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்து வருகின்றன. எனவே அதிக டிமாண்டு இருக்கும் இந்தப் பிரிவில் முன்னதாக விற்பனை செய்யப்பட்ட டஸ்டரை புதிய வடிவில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறது ரெனோ.

வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பினாலும், அவர்கள் விரும்பும் காம்பினேஷனில், அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் குறிப்பிட்ட வேரியன்ட் இருக்க வேண்டும் இல்லையா. மேற்கூறிய மூன்று கார் மாடல்களும் அதிகளவில் விற்பனையாகின்றன என்றாலும், அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு பவர்ட்ரெயின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொடுத்துள்ளன ஹூண்டாயும், மாருதியும்.

Renault Duster Side

அவற்றுடன் ஒப்பிடும் போது டஸ்டரில் அந்தளவிற்கு வெரைட்டி இல்லை என்று கூறலாம், அல்லது இப்போதைக்கு. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1.0 லிட்டர் இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கான ஆப்ஷன் வெகுவாகக் குறைகிறது. 1.0 + மேனுவல், 1.3 + மேனுவல் மற்றும் 1.3 + ஆட்டோமேட்டிக் ஆகிய ஒன்றில் ஏதாவது ஒன்றைத் தான் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இது வாடிக்கையாளர்களின் வாங்கும் விருப்பத்தையும் மாற்றும் திறன் கொண்டது. மேலும், ஆட்டோமேட்டிக் வேரியன்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே கிட்டத்தட்ட 14.50 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூமில் தான் தொடங்குகிறது.

Renault Duster

இது அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்வதற்கான சிறந்த திட்டம் கிடையாது. இதனை ரெனோவும் நன்கு உணர்ந்தே இருக்கிறது. எனவே தான் டஸ்டர் எஸ்யூவியில் குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை விரைவில் கொண்டு வரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தற்போது டஸ்டரின் லைன்-அப்பில் ஆத்தென்டிக் என்பது அடிப்படை வேரியன்டாகவும், எவல்யூஷன் இரண்டாவது அடிப்படை வேரியன்டாகவும் இருக்கிறது. இந்த எவல்யூஷன் வேரியன்டிலேயே நாம் மேலே பார்த்த மூன்று பவர்ட்ரெயின் ஆப்ஷன்களும் கிடைக்கிறது. அப்படியென்றால் அடிப்படையான ஆத்தென்டிக் வேரியன்டில் தான் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை ரெனோ கொடுத்தாக வேண்டும்.

ஆனால் ஆத்தென்டிக் வேரியன்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1.3 லிட்டர் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை இந்த அடிப்படை வேரியன்டில் கொடுத்தாலும் 1 லட்சம் ரூபாய் வரை குறைவாக 13.50 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே அதனை ரெனோவால் விற்பனை செய்ய முடியும்.

எனவே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வைக் கொடுப்பதைக் குறித்து ரெனோ சிந்திப்பதே சிறந்தது. அதனைத் தான் அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவே எதிர்பார்க்கப்படுகிறது. 1.0 லிட்டர் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும் பட்சத்தில் அது இன்னும் நிறைய வாடிக்கைாளர்கள் டஸ்டரை நோக்கி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் இல்லாமல், மிகவும் பவர்ஃபுல்லான (டஸ்டர் லைன்-அப்பில்) 1.8 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் பவர்ட்ரெயினையும் இந்தக் காரில் கொடுக்கவிருக்கிறது ரெனோ. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தப் புதிய பவர்ஃபுல்லான இன்ஜினுடன் கூடிய டஸ்டரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. இது டஸ்டரில் நாம் மேலே பேசிய வெரைட்டியைக் கொடுக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய நிலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லாமல் ஒரு இன்ஜினை அறிமுகப்படுத்துவது என்பது, அதன் விற்பனை அளவை நிறுவனமே குறைப்பது போலாகும். குறிப்பாக பெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் வாகன நெரிசல் காரணமாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையே அதிகம் விரும்புகிறார்கள். டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொடுக்காமல் இருப்பது இந்தியாவின் பெருநகர வாடிக்கையாளர்களுக்கு இந்த இன்ஜின் தேர்வையே கொடுக்காதது போலத் தான் இருக்கும்.

Article Published On: Friday, June 12, 2026, 9:04 [IST]
English summary
Renault to give low price automatic gearbox options in duster lineup
மேலும்... #renault #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out