இவ்ளோ கம்மியான விலையில் இன்னொரு 7 சீட்டர் காரா! இந்திய மார்க்கெட்டை மிரள விட போகும் பிரான்ஸ் நிறுவனம்!

பிரான்ஸை (France) சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. முன்பு ரெனால்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3 கார்களை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்து வந்தது. அவை ரெனால்ட் க்விட் (Renault Kwid), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகியவை ஆகும்.

இந்த வரிசையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) காரை ரெனால்ட் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் இத்துடன் நிற்க போவதில்லை. கூடிய விரைவில் மேலும் ஒரு புத்தம் புதிய காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Renault Triber Seats

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது, 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட 7 சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். 2+3+2 என்ற இருக்கை அமைப்புடன் இந்த கார் விற்பனை செய்யப்படும். அத்துடன் 2+2+2 என்ற இருக்கை அமைப்புடனும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 2+2+2 இருக்கை அமைப்பின் 2வது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்படும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை (Engine Option), இந்த கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

New-gen Renault Duster

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை எல்லாம் இந்த காரின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.

இந்திய சந்தையில் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV7XO) போன்ற கார்களுக்கு எல்லாம் இது மாற்று ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே ரெனால்ட் நிறுவனத்தின் இந்த 7 சீட்டர் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருக்கும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 7 சீட்டர் எஸ்யூவி ரக காருக்கும் இடையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வசதிகள், இன்ஜின் ஆப்ஷன்கள் போன்றவற்றை 2 கார்களும் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டிசைன் போன்ற அம்சங்களில் இந்த 2 கார்களும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என கருதப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை ரெனால்ட் நிறுவனம் கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.

ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் எம்பிவி காரை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரெனால்ட் ட்ரைபர் 7 சீட்டர் எம்பிவி காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது.

Article Published On: Sunday, April 26, 2026, 17:45 [IST]
English summary
Renault to launch a new 7 seater suv in india expected price features and more details
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+