பிரான்ஸ்காரன் ஒரு முடிவோடதான் இருக்கான்! மாருதி, டாடாவை கதிகலங்க வைத்த புதிய கார்! அடிமாட்டு விலையில் வருது!
பிரான்ஸை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ரெனால்ட் (Renault). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் நிறுவனம் தத்தளித்து கொண்டு உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) காரின் விற்பனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மறுபக்கம் ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகிய கார்களின் விற்பனை ஓரளவிற்குதான் இருக்கிறது. தற்போதைய நிலையில் ரெனால்ட் நிறுவனம் இந்த 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இவற்றின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு சுமார் 3 ஆயிரம் - 4 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

எனவே இந்திய சந்தையில் விற்பனை எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த வேண்டும் என ரெனால்ட் நிறுவனம் விரும்புகிறது. இதற்காக பல்வேறு புதிய கார்களை ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) ஒன்றாகும்.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் விலை எவ்வளவு? என்பது வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் 5 சீட்டர் மாடல் ஆகும்.

இதை தொடர்ந்து புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் 7 சீட்டர் வெர்ஷனை வரும் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் (அடுத்த ஆண்டு) ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் நிறுவனம் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஆட்டோ கார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே ஒரு காரை விற்பனை செய்து வருகிறது. அது ரெனால்ட் கைகர் ஆகும். ஆனால் இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த 1,21,591 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 36.61 சதவீத வளர்ச்சி ஆகும். எனவே இந்த செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகி கொண்டே உள்ளன.
வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால்தான், ரெனால்ட் நிறுவனமும் மேலும் ஒரு காரை இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் ரெனால்ட் கைகர் காரிடம் இருந்து இதன் டிசைன் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
அனேகமாக இந்த காரை நம்மால் மினி டஸ்டர் என கூற முடியும். ஆனால் கிட்டத்தட்ட ரெனால்ட் கைகர் காரின் விலையில்தான், இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ரெனால்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி, கைகர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் வரும் 2027ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2028ம் ஆண்டின் தொடக்கத்திலோதான் ரெனால்ட் நிறுவனத்தின் இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் வருகைக்கு பின்னர், ரெனால்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3X0) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எல்லாம், ரெனால்ட் நிறுவனத்தின் இந்த புதிய கார் நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








