இந்தியாவின் மலிவான 7-சீட்டர் கார்... சென்னையில் ஆன்-ரோடு விலை எவ்வளவுனு சொல்றாங்க?

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அளவில் பெரியதான கார், டிரைபர் ஆகும். அளவில் பெரியதான MPV வகையை சேர்ந்த காராக இருப்பினும் குறைவான விலையில் கிடைப்பது டிரைபரின் முக்கிய சிறப்பம்சம் ஆகும். 7 பேர் அமரக்கூடிய டிரைபர் கார் வெறும் ரூ.5.81 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஆன்-ரோடு விலை ஆனது RTO கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை சேர்த்து வருவதாகும். அப்படியென்றால், குறைந்த விலையில் கிடைக்கும் ரெனால்ட் டிரைபரின் ஆன்-ரோடு விலைகள் எந்த அளவிற்கு தற்சமயம் உள்ளது என்பதை அறியும் முயற்சியாக சென்னையில் செயல்படும் குன் ரெனால்ட் (Kun Renault) டீலர்ஷிப் ஷோரூம் நெட்வொர்க்கை தொடர்புக் கொண்டு விசாரித்தோம்.

renault triber chennai on-road prices

அதன் மூலம் எங்களுக்கு தெரியவந்த விபரங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். ரெனால்ட் டிரைபர் கார் அதென்டிக், எவால்யூஷன், டெக்னோ மற்றும் எமோஷன் என நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் ஆன்-ரோடு விலைகளும் எவ்வளவு என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டிரைபர் அதென்டிக்
அதென்டிக் ஆனது டிரைபர் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட் ஆகும். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தான் மேலே கூறப்பட்ட ரூ.5.81 லட்சம் ஆகும். RTO பதிவு, இன்ஸ்சூரன்ஸ் மற்றும் சாலை வரியை எல்லாம் சேர்த்தால் சென்னை ஆன்-ரோடு விலை ரூ.6,97,003 ஆக தற்சமயம் உள்ளது.

renault triber chennai on-road prices

அதுவே, காருடன் அடிப்படையான ஆக்ஸசரீகள், கூடுதல் இன்ஸ்சூரன்ஸ், உத்தரவாதம், ரெனால்ட் ஈசி கேர் மற்றும் செராமிக் கோட்டிங் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து வாங்கினால் ரூ.7,55,908 ஆகும். ரெனால்ட் ஈசி கேரில் என்ஜின் ஆயில் & கூலண்ட், ஆயில் & ஏர் ஃபில்டர், விண்ட்ஷீல்டு வாஷர், ஸ்பார்க் பிளக்குகள், க்ரீஸ், பிரேக் க்ளீனர், வீல் சீரமைப்பு & சமன் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் பராமரிப்பு வேலைகள் பணியாளர்கள் கட்டணமின்றி செய்து தரப்படும்.

டிரைபர் எவால்யூஷன்
அதென்டிக் வேரியண்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள வேரியண்ட்டான இதுவும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.6.70 லட்சம் ஆக உள்ளது. அதுவே சென்னை ஆன்-ரோடு விலை ரூ.8,00,379 ஆக வருகிறது. மேலும், ஆக்ஸசரீ, ரெனால்ட் ஈசி கேர் உள்ளிட்டவற்றை எல்லாம் சேர்த்து வாங்கினால் விலை ரூ.8,59,980 ஆகும்.

டிரைபர் டெக்னோ
ரெனால்ட் டிரைபர் காரின் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்டான இது ரூ.7.39 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்சமயம் கிடைக்கிறது. மேற்கூறப்பட்ட இரு வேரியண்ட்களை போன்று மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும் இதன் சென்னை ஆன்-ரோடு விலை ரூ.8,81,367 ஆகும். அடிப்படையான ஆடம்பர அம்சங்கள் உடன் வாங்கினால் ரூ.9,41,514 செலவு செய்ய வேண்டி இருக்கும்.

டிரைபர் எமோஷன்
டிரைபர் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக விளங்கும் இது மேனுவல் மற்றும் AMT என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. மேலும், மற்ற வேரியண்ட்களில் கிடைக்காத ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் இந்த வேரியண்ட்டை வாங்கலாம். அதாவது, காரின் வெளிப்புற உடல் இரு நிறங்களில் வழங்கப்படும்.

எமோஷன் வேரியண்ட்டை மேனுவல் ஆப்ஷனில் ட்யூயல்-டோன் இல்லாமல் ரூ.9,52,703 என்கிற ஆன்-ரோடு விலையிலும், ட்யூயல்-டோன் உடன் ரூ.9,77,170 என்கிற ஆன்-ரோடு விலையிலும் வாங்கலாம். அதுவே, AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் சென்னை ஆன்-ரோடு விலைகள் முறையே ரூ.10,08,160 மற்றும் ரூ.10,32,626 ஆக உள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்களை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Variant Ex-Showroom Price Comp. Insurance (+3Yr 3rd Party) Reg. + Life Tax + Fees Chennai On-Road Price
Authentic MT 5,76,300 31,554 83,819 6,91,673
Evolution MT 6,63,200 34,600 95,116 7,92,916
Techno MT 7,31,800 37,005 104,034 8,72,839
Emotion MT 7,91,200 39,087 111,756 9,42,043
Emotion MT DT 8,12,300 39,827 114,499 9,66,626
Emotion AMT 8,38,800 40,756 117,944 9,97,500
Emotion AMT DT 8,59,800 41,492 120,674 1,021,966
Variant Basic Accessories Zero Dep. Insurance Add-on Extended Warranty Renault Easy Care Ceramic Coating On-Road Price (Optional)
Authentic MT 13,632 4,522 8,707 15,547 16,461 7,50,542
Evolution MT 13,632 5,204 8,707 15,547 16,461 8,52,468
Techno MT 13,632 5,742 8,707 15,547 16,461 9,32,928
Emotion MT 13,632 6,209 8,707 15,547 16,461 1,002,599
Emotion MT DT 13,632 6,374 8,707 15,547 16,461 1,027,347
Emotion AMT 13,632 6,582 9,405 15,547 16,461 1,059,127
Emotion AMT DT 13,632 6,747 9,405 15,547 16,461 1,083,758

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் டிரைபரின் டாப் எமோஷன் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலைகள் மட்டுமே ரூ.10 லட்சத்தை தாண்டி செல்கின்றன. மற்றப்படி, மற்ற வேரியண்ட்களை ரூ.10 லட்சத்திற்குள் சொந்தமாக்கி விடலாம். மேலும், இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிரைபரின் விலைகள் ஆகும்.

நாங்கள் தொடர்புக் கொண்ட குன் ரெனால்ட் டீலர்ஷிப் ஷோரூமில் பழைய டிரைபர் காரும் மேற்கூறப்பட்ட விலைகளை காட்டிலும் ரூ.3,000- ரூ.11,000 வரையில் குறைவான விலையில் கிடைக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக நாங்கள் சொல்வது என்னவென்றால், எந்தவொரு காரின் ஆன்-ரோடு விலைகளும் பல்வேறு காரணிகளால் தொடர்ந்து மாற்றம் காணக்கூடியவை ஆகும். இருப்பினும், இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ள ஆன்-ரோடு விலைகளில் அடுத்த சில மாதங்களுக்கு பெரியதாக மாற்றம் இருக்காது.

Article Published On: Sunday, June 14, 2026, 16:35 [IST]
English summary
Renault triber mpv chennai on road prices june 2026 include rto charges and insurance
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out