7 பேர் அமரக்கூடிய எம்பிவி காரை 6 லட்ச ரூபாய்க்குள் விற்றாலும் வாங்க ஆள் இல்ல! எர்டிகாவுக்கு பதிலாக வாங்கலாமா?

ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் சரிவை சந்தித்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் டிரைபர் கார்கள் விற்பனை எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அப்படி எத்தனை டிரைபர் கார்கள் மட்டுமே கடந்த ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அது எவ்வளவு குறைவு என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரெனால்ட் நிறுவனத்தின் 7-சீட்டர் எம்பிவி வகை காராக டிரைபர் விளங்குகிறது. அளவில் பெரியதான காராக இருப்பினும், குறைந்த விலையில் டிரைபர் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் எம்பிவி காராக டிரைபர் விளங்குகிறது. இருப்பினும், டிரைபர் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது இல்லை என்பது ஒவ்வொரு மாதமும் அதன் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது.

renault triber mpv car sales

இத்தனைக்கும் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த 2025ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் கூட இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், அதற்குள்ளாக டிரைபரின் விற்பனை வெகுவாக குறைய துவங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் ஆயிரத்து 917 டிரைபர் கார்களை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் 94 டிரைபர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாலும், கடந்த 2025ஆம் ஆண்டின் இதே ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டிரைபர் கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

renault triber mpv car sales

ஏனெனில், 2025 ஏப்ரலில் வெறும் ஆயிரத்து 401 டிரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் நடப்பாண்டு ஏப்ரலில் 516 டிரைபர் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது ரெனால்ட் நிறுவனத்திற்கு சற்று மகிழ்ச்சியை தந்தாலும், இந்த 2026ஆம் வருடத்தில் இருப்பதிலேயே குறைந்த எண்ணிக்கையிலான டிரைபர் கார்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது நிச்சயமாக ஏமாற்றத்தை கொடுக்கும்.

இந்த 2026ஆம் ஆண்டு என்று மட்டுமில்லாமல், கடந்த 6 மாதங்களிலேயே குறைவான எண்ணிக்கையிலான டிரைபர் கார்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக டிரைபரின் மாத விற்பனை எண்ணிக்கை கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில்தான் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் அதிகப்பட்சமாக ஜனவரி மாதத்தில் 2 ஆயிரத்து 509 டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிரைபர் கார்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அதெண்டிக், எவால்யூஷன், டெக்னோ மற்றும் எமோஷன் என நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. டிரைபரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.81 லட்சத்தில் இருந்து ரூ.8.69 லட்சம் வரையில் உள்ளன.

டிரைபரில் 1 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் என்கிற ஒரேயொரு என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த என்ஜினை மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். சிஎன்ஜி ஆப்ஷனிலும் டிரைபர் விற்பனை செய்யப்படுகிறது. சிஎன்ஜி ஆப்ஷனிலும் இதே 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பமாக செல்வதற்கு குறைந்த விலையில் ஒரு எம்பிவி காரை வாங்க விரும்பினால், ரெனால்ட் டிரைபர் ஏற்றதாக இருக்கும். இருப்பினும், டிரைபரை வாங்குபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருவது, அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைவதை காட்டுகிறது. விரைவில் புதியதாக பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை டிரைபர் பெறவுள்ளதாக கூறப்படுவதால், அதன் பிறகாவது இந்த ரெனால்ட் எம்பிவி காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Article Published On: Friday, May 15, 2026, 21:47 [IST]
English summary
Renault triber mpv posts below 2000 units sales in april 2026 in india
மேலும்... #renault #renault triber #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+