அடிமாட்டு விலையில் 7 சீட்டர் கார்! மாருதிய ஒழிச்சே ஆகணும்னு கங்கணம் கட்டிய பிரான்ஸ்-ஜப்பான் நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கு நல்ல டிமாண்ட் காணப்படுகிறது.

இது 7 சீட்டர் எம்பிவி ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, மிகவும் விலை குறைவானது என்பதுதான் இதற்கு காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, ரெனால்ட் ட்ரைபர் பதிவு செய்து வருகிறது. இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

Renault Triber Side Design

ரெனால்ட் ட்ரைபர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,324 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 1,659 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 665 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனையில் 40.08 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Nissan Gravite

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, ரெனால்ட் ட்ரைபர் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,064 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த டிசம்பர் மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2,324 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் பார்த்தால் 260 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் ரெனால்ட் ட்ரைபர் கார் 12.60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் கார் மிகவும் குறைவான விலையில் கிடைப்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களில், ரெனால்ட் ட்ரைபர் காருக்கு போட்டியாக புதிய கார் ஒன்று விற்பனைக்கு வரவுள்ளது. அது நிஸான் க்ராவைட் (Nissan Gravite) ஆகும். 7 சீட்டர் எம்பிவி ரகத்தை சேர்ந்த இந்த கார், வரும் ஜனவரி 21ம் தேதி (January 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் ஆகும். அதாவது பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த கூட்டணியின் மூலம், ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள க்ராவைட் காரை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options), வசதிகள் (Features) ஆகியவற்றை, நிஸான் க்ராவைட் காரிலும் நாம் அப்படியே எதிர்பார்க்க முடியும். அதேபோல் நிஸான் க்ராவைட் காரின் விலையும், கிட்டத்தட்ட ரெனால்ட் ட்ரைபர் காரின் விலையை போல், மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதும் உறுதி. நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப விலை அனேகமாக 5.75-6 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) 7 சீட்டர் எம்பிவி காருக்கு, மிகவும் விலை குறைவான மாற்று ஆப்ஷனாக ரெனால்ட் ட்ரைபர் உள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நிஸான் க்ராவைட் காரும் கூடிய விரைவில், மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு போட்டியாக களமிறங்கவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 18, 2026, 18:31 [IST]
English summary
Renault triber sales report december 2025 40 08 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+