பைக் விலையில் 7 சீட்டர் கார்! மாருதி எர்டிகாவை விட 3 லட்ச ரூபாய்க்கும் மேல் குறைவு! மார்க்கெட்ட மிரள விட்றாங்க

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV Cars) கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,509 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 1,456 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Renault Triber Side Design

அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,053 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனையில் 72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஏழு இருக்கை (7 சீட்டர்) கார்களின் பட்டியலில் (Top 10 7-Seater Cars January 2026), ரெனால்ட் ட்ரைபர் 9வது இடத்தையும் பிடித்துள்ளது.

Renault Triber

இந்த டாப் 10 பட்டியலின் முதல் 8 இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா, மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ, டொயோட்டா இன்னோவா, கியா கேரன்ஸ், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள் உள்ளன.

இந்த வரிசையில் ரெனால்ட் ட்ரைபர் 9வது இடம் பிடித்துள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு, ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைதான் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல், கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதவிர விலை குறைவு என்பதாலும், ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் இது பல பிரீமியம் பைக்குகளை விட விலை குறைவானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி எர்டிகா உடன் ஒப்பிடும்போது, ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை 3 லட்ச ரூபாய்க்கும் மேல் குறைவு ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் எம்பிவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் நிஸான் க்ராவைட் (Nissan Gravite) 7 சீட்டர் எம்பிவி கார் வரும் பிப்ரவரி 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிஸான் க்ராவைட் காரின் வருகைக்கு பின்னர், இந்தியாவின் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி செக்மெண்ட்டில் போட்டி இன்னும் கடுமையாகலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 14, 2026, 23:14 [IST]
English summary
Renault triber sales report january 2026 72 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+