விலை குறைவான 7 சீட்டர் காரின் விற்பனை எகிறியது... ஒரு வருஷ கேப்ல 32 சதவீதம் அதிகமாயிருச்சு...

இந்திய சந்தையில் கிடைத்து வரும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார்களில் (Affordable 7 Seater MPV Cars) ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) வெறும் 5,80,875 ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையும் கூட வெறும் 8,68,950 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. ரெனால்ட் ட்ரைபர் காரை பலரும் வாங்குவதற்கு இந்த குறைவான விலைதான் மிகவும் முக்கியமான காரணம் ஆகும். இந்த சூழலில் ரெனால்ட் ட்ரைபர் காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

2026 Renault Triber

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 1,871 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 31.7 சதவீதம் அதிகம் ஆகும். இது மிகவும் சிறப்பான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

ரெனால்ட் ட்ரைபர் காரின் நீளம் 3,985 மிமீ ஆகும். நீளம் 4 மீட்டருக்குள் இருந்தாலும் கூட, அதற்குள்ளாகவே 3 வரிசை இருக்கை அமைப்பை ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் கார், அம்பர் டெரகோட்டா, ஷேடோ க்ரே, ஜன்ஸ்கர் ப்ளூ, ஐஸ் கூல் ஒயிட், மூன்லைட் சில்வர், ஸ்டீல்த் பிளாக் ஆகிய சிங்கிள் டோன் கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கிறது.

Renault Triber

அத்துடன் அம்பர் டெரேகோட்டா, ஷேடோ க்ரே மற்றும் ஐஸ் கூல் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் மிஸ்ட்ரி பிளாக் ரூஃப் சேர்த்து, 3 ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களிலும் ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனை செய்யப்படுகிறது. ரெனால்ட் ட்ரைபர் கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஏராளமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்பட்டுள்ளன.

இதில், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி, பிரேக் அஸிஸ்ட், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீல் பெல்ட் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, யூஎஸ்பி போர்ட், 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகிய வசதிகளையும் ரெனால்ட் ட்ரைபர் கார் கொண்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரை, 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை ரெனால்ட் ட்ரைபர் கொண்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் ஆக உள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ரெனால்ட் ட்ரைபர் காரின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 40 லிட்டர்களாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் க்ராவைட் (Nissan Gravite) 7 சீட்டர் எம்பிவி காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ரெனால்ட் ட்ரைபர் திகழ்கிறது. மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga) மாற்றாகவும் ரெனால்ட் ட்ரைபரை பரிசீலனை செய்யலாம். மாருதி சுஸுகி எர்டிகாவை விட ரெனால்ட் ட்ரைபர் சுமார் 3 லட்ச ரூபாய் விலை குறைவானது. இருப்பினும் இடவசதி மற்றும் இன்ஜின் செயல்திறன் ஆகிய அம்சங்களில் மாருதி சுஸுகி எர்டிகாவே தலை சிறந்து விளங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, July 10, 2026, 22:07 [IST]
English summary
Renault triber sales report june 2026 32 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out